மாணவர் பெறும் மதிப்பெண்; ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு

அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வில்மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில்அனைவருக்கும் கல்வி இயக்ககமானஎஸ்.எஸ்.ஏ.திட்டம் மூலம்மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும்ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது;இதற்காகமத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்குபயணப்படிசாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாராஅவர் கற்றுக் கொடுத்ததால்,மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா எனஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு,ஜன., 5 முதல் நடக்க உள்ளது. மாவட்டம்வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்துஅவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில்எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோஅந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம்எஸ்.எஸ்.ஏ.விளக்கம் கேட்கும்.

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் அரசு விடுமுறை தினங்கள் 9

சென்னை 
2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள் ளனர். 
2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். 
தமிழக அரசு அலுவலகங்கள், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கள் உட்பட அனைத்து வர்த்தக வங்கி களுக்கும், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், வாரியங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அரசு அறிவித்துள்ள விடுமுறை அடிப்படையில், ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு, மார்ச் 25ம் தேதி புனிதவெள்ளி, வங்கிக்கணக்கு முடிப்பு நாள் ஏப்ரல் 1-ம் தேதி, தெலுங்கு வருடப்பிறப்பு ஏப்ரல் 8-ம் தேதி ஆகியவை வெள்ளிக்கிழமையில் வருவதால், தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை இருக்கும். 
அதேபோல், சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதாலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி, மே தினம், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் ஆகியவை வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. 

அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:- 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்று ச.கண்ணப்பன் கூறினார்.

பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை

பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:

தேதி            பாடம்

11-1-2016        தமிழ் முதல் தாள்
12-1-2016        தமிழ் இரண்டாம் தாள்
13-1-2016        ஆங்கிலம் முதல் தாள்
14-1-2016        ஆங்கிலம் இரண்டாம் தாள்
18-1-2016        வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
19-1-2016        கணிதம், மைக்ரோ-பயாலஜி, விலங்கியல்,கணக்குப்பதிவியல் மற்றும்தணிக்கையியல் (தியரி),உணவு மேலாண்மை, குழந்தை பராமரிப்பு, விவசாய பயிற்சி, 'நியூட்ரிசன் அன் டயாடெடிக்ஸ்', 'டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்',அரசியல் அறிவியல், நர்சிங் 

தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனராக வசுந்தராதேவி நியமிக்கப்பட்டுள்ளார் .


பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு விரைவில் தேர்வு?

நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தில், சென்னை உட்பட, 32 வருவாய் மாவட்டங்களில், பிளஸ் 2க்கு, 2,400; 10ம் வகுப்புக்கு, 3,500 மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பள்ளிகளை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.பிளஸ் 2 தேர்வில், தனித்தேர்வர்கள் உட்பட, 8.5 லட்சம் பேர்; 10ம் வகுப்பு தேர்வில், 10.5 லட்சம் பேர் பங்கேற்கலாம் என தெரிகிறது. இதேபோல், வினாத்தாள் தயாரிப்பு, பார் கோடுடன் கூடிய விடைத்தாள் மற்றும் முகப்பு சீட்டு தயாரிப்பு போன்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில், தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்
படுகிறது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:மழை வெள்ளத்தால், நடப்பாண்டு, அரையாண்டு தேர்வு நடப்பதில் சிக்கல் உள்ளது. ஆனாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஏற்கனவே பாடங்கள் நடத்தி முடித்துவிட்டனர். அதனால், முன்கூட்டியே தேர்வு நடத்தினால், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்; எனினும், அது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்

புத்தகங்களை இழந்த தனியார் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலம் பெறலாம் தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவிப்பு

சென்னை தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கூறியிருப்பதாவது: சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாடநூல்களை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சம்பந்தப் பட்ட துறைத்தலைவர்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாடநூல்களை இழந்திருந்தால் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் ‘www.textbookcorp.in’ என்ற இணையதளம் வழியாக பதிவுசெய்து, வீட்டு முகவரியிலேயே பாடநூல்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தின் வட்டார அலுவலகங்களிலும் போதுமான புத்தகங்கள் உள்ளன. இது தவிர தனியார் பள்ளிகள் கூடுதல் பாடநூல்கள் கோரினால், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி இணையவழி சேவையை பயன்படுத்தி உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி பாடத்திட்டத்தை குறைக்க அறிவியல் இயக்கம் கோரிக்கை

சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ.மோகனா, பேராசிரியர் ராமா னுஜம், உதயன் ஆகியோர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னைக்கு கொடுத்த முக் கியத்துவத்துவமும் விளம்பரமும், அதிகம் பாதிக்கப்பட்ட கடலூ ருக்கு கொடுக்கப்படவில்லை. அந்த மாவட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் சென்று சேரவில்லை. வெள்ளத்தில் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. என்னென்ன பாதிப்பு என்பது துல்லியமாக தெரிய வில்லை. இது இயற்கை பேரிடர் மட்டுமல்ல. மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகர் கட்டுமானம், நீர் வடிகால் மேலாண்மை போன்றவையும் இந்த பேரிடருக்கு முக்கிய காரணங்களாகும். இந்த பேரிடரில் அதிகம் பாதிக்கப்பட்டது அடித்தட்டு மக்கள், பெண்கள், குழந்தைகள்தான். பொது சுகாதாரம், நோய் தடுப்பு தற்போது முக்கியம். மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னை, கடலூர், திருவள் ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மாணவர்களை நோய் தொற்றி லிருந்து பாதுகாக்க தொடர் மருத் துவமும் உளவியல் ஆலோசனை யும் தேவை. மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது, தனியார் பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கவேண்டும். பாடத்திட்டத்தை குறைத்து நவம்பர் வரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்த வேண்டும். சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை வெள்ள பாதிப்பின் தொடர் நடவடிக்கையாக பிரச்சார இயக்கமும் நடக்கவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் -நவம்பர் மற்றும் டிசம்பர் 2015 மாத ஊதியம் வழங்க ஆணை

முதலமைச்சர் நிவாரண நிதி -அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் -அரசாணை

அரையாண்டு தேர்வு ரத்து? அரசு தீவிர ஆலோசனை

வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், இன்று செயல்பட துவங்கின.
இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும், 10 நாட்களில், மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. எனவே, அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.இந்நிலையில், அரையாண்டு தேர்வு பற்றி, அரசு தரப்பில் தீவிர ஆலோசனை துவங்கி உள்ளது.


இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாணவர்கள் பாதிக்கக் கூடாது; அதே நேரத்தில், தேர்வு இல்லை என்ற அலட்சியமும் வந்துவிடக் கூடாது.எனவே, கிறிஸ்துமஸ் முன்னிட்டு, 24ம் தேதி முதல், 27ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு மட்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை; மற்ற மாவட்டங்களுக்கு, 31 வரை விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.அரையாண்டு தேர்வை பொறுத்தவரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு குறுகிய கால கட்டத்தில், ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படலாம். மற்ற மாணவர்களுக்கு பாடங்கள் முடித்திருந்தால், 2ம் பருவத் தேர்வு முடிக்காவிட்டால், தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம்; முதல்வரின் ஒப்புதல் பெற்று, அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்க கவுன்சலிங் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா தகவல்

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு மனக் கவலை மற்றும் தேர்வு பயத் தைப் போக்க உளவியல் ஆலோசனை (கவுன்சலிங்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தெரிவித்தார். சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் மாவட்டங்களில் தொடர் மழை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப் பட்டன. மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் வகையில் பள்ளி மாண வர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் கடிதம்

சென்னை மழை வெள்ளத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் வழக்கறிஞர் முகமது நஸ்ருல்லா நேற்று வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: சமீபத்தில் கனமழை கொட் டியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்க மாக டிசம்பர் 2 அல்லது 3-ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கும். இந்த ஆண்டு கனமழை காரணமாக அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பேரிட ரில் இருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. மாணவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி யிருக்கின்றனர். அதனால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யவும், அடுத்த ஆண்டு இறுதித் தேர்வு வரை படிப்பைத் தொடர மாணவர்களை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நெட்' தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்

சென்னை சிஎஸ்ஐஆர் `நெட்' தகுதித் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் சென்னை தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர் பி.சுரேஷ் என்பவரை 044-22541687 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94444-56695 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் .

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும்.
இதற்காக, வினாத்தாள்களும் இறுதி செய்யப்பட்டு, விடைத்தாள் அச்சடிப்பு ஆயத்த பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, பிப்., 29ல், பிளஸ் 2 தேர்வை துவங்க, தேர்வுத்துறை திட்ட
மிட்டிருந்தது.ஆனால், மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, வகுப்புகள் நடக்காமல், பாடங்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பிப்ரவரியில் தேர்வு வைப்பதா, அல்லது மார்ச், முதல் வாரத்துக்கு பின் துவங்குவதா என, தேர்வுத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.இதற்காக, பிப்., 29, மார்ச், 2 மற்றும் மார்ச், 7 ஆகிய தேதிகளில், ஏதாவது, ஒரு நாளில், பிளஸ் 2 தேர்வை துவங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் நாளை திறந்ததும், பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வராததால், தேர்வு எப்போது என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் பெய்த மழையால், மாணவர்கள் தங்கள் பாட குறிப்புகளையும், புத்தகங்களையும் இழந்து விட்டனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயாராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் குடும்பத்தினர் பலர், உடைமைகளை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை, வட்டியில்லா முன் பணமாக வழங்க வேண்டும்.
இளமாறன், ஆசிரியர் சங்க கூட்டுக்குழு,
'ஜாக்டா' ஒருங்கிணைப்பாளர்

அரையாண்டு தேர்வுகள் குறித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்: முதல்வர் உத்தரவு

டிசம்பரில் நடக்கவிருக்கும் அரையாண்டுத் தேர்வை ஜனவரி மாதம் ஒத்தவைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள்
 பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக  பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்திட நான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரிjdய வருகிறது.  அரையாண்டு தேர்வு ஒத்தி வைப்பு அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள்  மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப நான் பள்ளிக்கல்வித் துறைக்கு  உத்தரவிட்டுள்ளேன்.

பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், சிடெட் என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
மாநில பள்ளிகளில் பணியாற்றதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.நடத்தும்டெட் எனப்படும்ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில்மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால்மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும்.
வரும், 2016க்கானசிடெட் தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வுபிப்., 21ம் தேதியும்இரண்டாவது தேர்வுசெப்., 18ம் தேதியும் நடக்கிறது. தமிழக அரசின்டெட் தேர்வுஇரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எனவே,மத்திய அரசின் தேர்வில்தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள்அதிக அளவில் பங்கேற்கலாம் என,தெரியவந்துள்ளது.

கனமழை எதிரொலி : அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தின் பலபகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.