சென்னை
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ.மோகனா, பேராசிரியர் ராமா னுஜம், உதயன் ஆகியோர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னைக்கு கொடுத்த முக் கியத்துவத்துவமும் விளம்பரமும், அதிகம் பாதிக்கப்பட்ட கடலூ ருக்கு கொடுக்கப்படவில்லை. அந்த மாவட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் சென்று சேரவில்லை. வெள்ளத்தில் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. என்னென்ன பாதிப்பு என்பது துல்லியமாக தெரிய வில்லை. இது இயற்கை பேரிடர் மட்டுமல்ல. மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகர் கட்டுமானம், நீர் வடிகால் மேலாண்மை போன்றவையும் இந்த பேரிடருக்கு முக்கிய காரணங்களாகும். இந்த பேரிடரில் அதிகம் பாதிக்கப்பட்டது அடித்தட்டு மக்கள், பெண்கள், குழந்தைகள்தான். பொது சுகாதாரம், நோய் தடுப்பு தற்போது முக்கியம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னை, கடலூர், திருவள் ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மாணவர்களை நோய் தொற்றி லிருந்து பாதுகாக்க தொடர் மருத் துவமும் உளவியல் ஆலோசனை யும் தேவை. மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது, தனியார் பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கவேண்டும். பாடத்திட்டத்தை குறைத்து நவம்பர் வரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்த வேண்டும்.
சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை வெள்ள பாதிப்பின் தொடர் நடவடிக்கையாக பிரச்சார இயக்கமும் நடக்கவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.