சென்னை
அரசு தேர்வுகள் இயக்கு நர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் பட உள்ளது. இந்த உதவித் தொகை வழங்குவதற்கு தகுதியான மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு என்எம்எம்எஸ் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 23-ம் தேதி நடை பெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. சில மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு வெகுநாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பருவத் தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெற வுள்ளதாலும், மாணவர் களின் நலன் கருதி என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குநர் கூறியுள்ளார்.