எஸ்.எஸ்.எல்.சி.கணிதம் வினாத் தாளில் இடம் பெற்றிருந்த 47-ஆவது கேள்விக்கு வரைபடம் வரைந்து அதன் மூலம் சமன்பாடுகண்டுபிடிக்க வேண்டும். இது 10 மதிப்பெண் கேள்வியாகும். இதில், சமன்பாடுக்கான கேள்வியில் எழுத்துப் பிழை இருந்தது.இதையடுத்து, அந்த சமன்பாட்டை மாணவ- மாணவியர் எழுத முயன்றிருந்தால் 4 மதிப்பெண் அளிக்க வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் மாணவ- மாணவியர் வரைபடம் வரைந்திருந்தால் மட்டுமே அதற்கு 6 மதிப்பெண் அளிக்கப்படும் எனவும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.