தொடக்க பள்ளிகளில், மூன்று லட்சம் ஆசிரியர் பணியிடங்களுக்கான, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
முதல் நாளான இன்று, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. நாளை, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, 6ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதில் தான், ஒவ்வொரு ஆண்டும் உள்ளடி வேலைகள் அதிகமாகி, ஆங்காங்கே முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இதேபோல, இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிலும், தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாக, கடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஆண்டு, காலி இடங்களை மறைத்து,அதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மறைமுகமாக இடமாறுதல் வழங்கக் கூடாது என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.