சென்னை
பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 27-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக சில மாவட் டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், தனித் தேர்வர்கள் நலன் கருதி அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, தனித் தேர்வர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சேவை மையங்களுக்குச் சென்று விண் ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.