சென்னை
அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்குத் தகுதியுடைய மாணவர்களை தேர்வுசெய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி தேர்வு வரும் ஜனவரி மாதம் 23-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) 30-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் டிசம்பர் 11-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து டிச. 15-ம் தேதிக் குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.