நேற்று(30.11.2015 கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி: நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கம்:
புதிய கல்விக் கொள்கை
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி:
அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்துறை சார்ந்த ஆலோசனைகளுக்குப் பின் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மத்திய பாடத்திட்டத்துக்கும், மாநில அரசுகளின் பாடத்திட்டத்திட்டுக்கும் சிறந்த ஒத்துழைப்பை அடுத்த ஆண்டு முதல் காண முடியும். மத்திய பாடத்திட்டத்திலும், மாநில பாடத்திட்டங்களிலும் வெவ்வேறு பாடத்திட்ட முறைகள் பின்பற்றப்படுவது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.