பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் கணிதப் பாடத்தில் 3361 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை காட்டிலும் மிக குறைவாகும். கடந்த ஆண்டு கணித பாடத்தில் 9710 பேர் 200-க்கு 200 எடுத்து இருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு (2014) 3882 பேர் 200-க்கு 200 எடுத்து இருந்தார்கள். வணிகவியல் பாடத்தில் 3084 பேர் 200-க்கு 200 மதிப் பெண் பெற்றனர். கடந்த வருடத்தில் 819 பேர் மட்டுமே எடுத்து இருந்தனர். கணக்கு பதிவியல் பாடத்தில 4341 பேரும், வணிக கணிதத்தில் 1072 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.
வேதியியல் பாடத்தில் 1703 பேர் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 1049 பேரும், 2014-ம் ஆண்டு 1693 பேரும், 200-க்கு 200 பெற்று இருந் தனர். இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு மிக குறைந்த அளவில் மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்துள்ளனர். 5 பேர் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 124 மாணவர்களும் அதற்கு முந்தைய ஆண்டு (2014) 2710 பேரும் இந்த பாடத்தில் 200-க்கு 200 மார்க் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
உயிரியல் பாடத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 775 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2014-ம் ஆண்டு 652 பேரும், 2015-ம் ஆண்டு 387 பேரும் 200-க்கு 200 வாங்கி இருந்தார்கள்.
விலங்கியல் பாடத்தில் 10 பேரும், தாவரவியல் பாடத்தில் 20 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள்.கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 303 மாண வர்கள் முழு மதிப்பெண் பெற்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும். 2014-ல் 993 பேரும், 2015-ல் 577 பேரும் 200-க்கு 200 மார்க் பெற்று இருந்தனர்.