15 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 6-வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் மாவட்ட அளவில் பேரணி, அடையாள உண்ணாவிரதம், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் என பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
உடன்பாடு இல்லை
பிப்ரவரி 9-ம் தேதி அன்று ஜாக்டோ அனைத்து சங்க பிரதிநிதிகளையும், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் உடன்பாடு ஏதும் எட்டப் படாததால் அரசு ஊழியர் சங்கத் தினர் 10-ம் தேதி முதல் கால வரை யற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தில் இறங்கினர். ஆனால், ஜாக்டோ நிர்வாகிகள் கோரிக்கை கள் தொடர்பாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியி டப்படலாம் என்பதால் அதுவரை காத்திருக்க முடிவுசெய்தனர். ஆனால், 16-ம் தேதி சமர்ப்பிக் கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கை கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாத தால் ஜாக்டோ நிர்வாகிகள் ஏமாற்றத்துக்கு உள்ளானார் கள்.
ஜாக்டோ பொதுக் குழு கூட்டம்
அடுத்தக் கட்ட போராட் டம் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஜாக்டோ பொதுக் குழு கூட்டம் சென்னை யில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3.30 மணியளவில் முடிவடைந்தது.
போராட்டம் அறிவிப்பு
பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜாக்டோ மாநில தொடர்பாளர் பெ.இளங்கோவன் நிருபர்களி டம் கூறும்போது, “15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.