ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விகிதம் சிறிதளவு உயர்த்தப் பட்டுள்ளது. தற்போது 8.75 சதவீத மாக இருக்கும் வட்டி விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டு 8.80 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 2 நிதி ஆண்டு களாக 8.75 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. வட்டி உயர்த்தப்பட்டதன் மூலம் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடை வார்கள். நடப்பு நிதி ஆண்டில் பிஎப் அமைப்புக்கு 34,844 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9 சதவீத வட்டி கொடுத்தால்கூட உபரியாக 100 கோடி ரூபாய் பிஎப் அமைப்பிடம் இருக்கும்.