சென்னை
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித்தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டுகளை பள்ளிகளுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.