பிளஸ் 2 தேர்வில் முறைகேடா?15 வகை தண்டனை அறிவிப்பு

இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கான 
தண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:

1 துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரை 
எச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.
2 துண்டுத்தாள், விடைக்குறிப்பு வைத்திருப்பதை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால், உடனடியாக மாணவரை வெளியேற்ற வேண்டும். துண்டுத்தாளை, மாணவர் பெயர் விவரத்துடன் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர் விடைக்குறிப்பை பயன்படுத்தாவிட்டால், மறு நாள் தேர்வு எழுதலாம். துண்டுத்தாளை பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வுக்கான விடைத்தாள் நிறுத்தம் 
செய்யப்படும்; ஓர் ஆண்டு அல்லது அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும்.
3 ஒரு மாணவரை பார்த்து மற்றொரு மாணவர் எழுதினால், உடனே வெளியேற்றப்படுவார். பார்த்து எழுதியதற்கு சாட்சி இருந்தால், அந்த மாணவர் அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் அல்லது, ஓர் ஆண்டுக்கு, குறிப்பிட்ட பாடத்தை எழுத முடியாது.

8-வது வகுப்பு வரை மாணவர்களின் கட்டாய தேர்ச்சியை ரத்து செய்யவேண்டும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

மாணவர்களின் கல்வி நலன் கருதி 8-வது வகுப்பு வரை மாணவ-மாணவிகளை கட்டாய பாஸ் செய்யும் முறையை ரத்துசெய்யவேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:-

கட்டாய தேர்ச்சியை கைவிட வேண்டும்

நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளிகளுக்கு விண்ணப்பித்துள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். 3 வருடத்திற்கு ஒரு முறை அங்கீகாரம் புதுப்பிக்கவேண்டியதை 5 வருடமாக நீட்டிக்கவேண்டும்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 8-வது வரை அனைத்து மாணவ-மாணவிகளும் கட்டாயம் தேர்ச்சி செய்து ஆகவேண்டும். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் போய்விட்டது. மாணவர்களுக்கு வாசிக்கக்கூட தெரிவதில்லை. எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதி 8-வது வகுப்புவரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்யவேண்டும்.

CPS FINAL SETTLEMENT-அரசாணை

10 ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு கையேடு

ஆசிரியர்களின் போராட்டம் 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு ஜாக்டோ உயர்மட்ட குழுவில் அறிவிப்பு

ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழுவின் கூட்டம் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரைமைண்ட், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முத்துசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டார்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஜாக்டோ சார்பாக மத்திய அரசின்  6 வது  ஊதியக்குழு அறிவித்த ஊதியம் மற்றும் பிறப்படிகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் தமிழக அரசால் வழங்கப்படாததை வழங்க வேண்டியும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டியும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ சார்பில் 5 கட்டங்களாக போராட்டங்களை நடத்தினோம்.அதனைத் தொடர்ந்து கடந்த 20 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினோம்.
ஆனால் ஜாக்டோவின் உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள பொதுத்தேர்வினை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு தற்பொழுது செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ அமைப்பின் சார்பில் நடைபெற இருந்து அனைத்துப் போராட்டங்களும் 3 மாதம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
மீண்டும் புதிய அரசு அமைந்த பின்னர் தங்களின் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என இளங்கோவன் கூறினார்.

பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிப்., 25ல் பேரணி'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவின் உயர்மட்டக் குழு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் ரங்கராஜன் தலைமையில், இன்று கூடி, மாவட்ட தலைநகரங்களில் பேரணி; பிப்., 25ல் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி போராட்டத்தை அறிவித்துள்ளது.
பிப்., 26ம் தேதி முதல், 3.5 லட்சம் ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். இதனால், கல்வித் துறையினர் மற்றும் தேர்வுத் துறையினர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 
நிலைமையை சமாளிக்கபொதுத்தேர்வில், தேர்வு மையங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. தேர்வு மைய மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், விடைத்தாள் மையம் பாதுகாப்பு, வினாத்தாள் பாதுகாப்பாளர்கள், பறக்கும் படை அமைத்தல், நிலையான கண்காணிப்பு படை அமைத்தல் என, பல பணிகள் நடக்க வேண்டியுள்ளது. இவை, ஆசிரியர்களின் போராட்டத்தால் முடங்கியுள்ளன. 
எனவே, நிலைமையை சமாளிக்க, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், 'தனியார் பள்ளி ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அக விலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி, பிடிஐ செய்தி நிறுவனத் திடம் கூறியதாவது:
கடந்த 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர் வோர் குறியீட்டு எண் 6.73 சதவீத மாக உள்ளது. அதன் அடிப்படை யில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம். அடிப்படை ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படி விகிதம் தற்போ துள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை விரைவில் அக விலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங் கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், 'வேலைக்கு வராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, வேலை நிறுத்தத்தால், அரசுப்பணிகள் முடங்கி உள்ளன. எனவே, 'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், 'வேலைக்கு வராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், அரசு ஊழியர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பிப்., 10 முதல், அரசு அலுவலகங்களுக்கு வந்தவர்கள், வராதோர், விடுப்பில் உள்ளோர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது.

மாவட்டங்களில் இந்த விவரம் தொகுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பளத்தை பிடிப்பதற்கான சுற்றறிக்கை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

'வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது; பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்; சம்பள பட்டியலை கவனத்துடன் தயார் செய்து அனுப்ப வேண்டும்' என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போராட்ட நாட்களுக்கான சம்பளம் ரத்தாகிறது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு:உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பட்டியல்

அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, "
அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன்.
அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி உள்ளனர். அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1) குடும்ப நல நிதி உயர்வு:
கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு குடும்பநல நிதித் திட்டம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு அலுவலர்களிடமிருந்து மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து 30 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, பணிக் காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், அவரின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், வழங்கப்படுகிறது.
இந்த குடும்ப நல நிதி உதவியை, உயர்த்த வேண்டுமென பல்வேறு சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதனை ஏற்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாய் என உயர்த்தப்படும். அரசு அலுவலரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 60 ரூபாய் இதற்காக பிடித்தம் செய்யப்படும். தற்போது, இத்திட்டத்திற்கு அரசு மானியமாக ஆண்டுதோறும் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. குடும்ப நல நிதி உதவித் தொகை உயர்த்தப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவான சுமார் 6 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
2) குழுக் காப்பீட்டுத் திட்டம் உயர்வு:
அரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பணியாளர்கள் ஆகியோருக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு காப்பீட்டுத் தொகையாக அரசு அலுவலர்களிடமிருந்து 30 ரூபாய் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 15 கோடி ரூபாய் அலுவலர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகை பங்களிப்பாக பெறப்படுகிறது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சராசரியாக செலுத்தப்படும் காப்பீட்டுப் பிரிமியம் தொகை 37 கோடி ரூபாய் ஆகும். அதாவது அரசு அலுவலர்களின் பங்களிப்பு நீங்கலாக, இத்திட்டத்திற்கு அரசு ஆண்டொன்றுக்கு 22 கோடி ரூபாய் வழங்கி வருகிறது. இந்தக் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
அலுவலர்கள் தற்போது செலுத்தும் பங்களிப்பு 60 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும். காப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
3) கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்ளுக்கு ஆண்டு ஊதிய உயர்வு:
கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணி வரன்முறை செய்யப்பட்ட பின்னரே, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு பணிப் பலன்களை அவர்கள் பெற இயலும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளதால், இதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில் 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்தவித விதித் தளர்வும் தேவைப்படாத அனைத்து நபர்களின் பணி நியமனமும், பொது அரசாணை மூலமாக முறைப்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதவிகளுக்கு, பொதுவான அரசாணை, வெளியிடப்பட்ட பின்னர் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். விதித் தளர்வு தேவைப்படும் அலுவலர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற்று விதிகளைத் தளர்வு செய்வதற்கான அரசாணைகள் வெளியிடப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்படும் வரையில் அவர்களை தற்காலிக அரசு அலுவலர்களாகக் கருதி, அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யப்படும்.
4) அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு
அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 1,000 ரூபாயாக, 1.4.2013 முதல் உயர்த்தப்பட்டது.
இந்த ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். 39,809 ஓய்வு பெற்ற அங்கன்வாடிப் பணியாளர்கள், 47,064 ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் என மொத்தம் 86,873 பணியாளர்கள் இதனால் பயன் பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் 51 கோடியே 13 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப் பயன் 50,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
சமையலர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும்; சமையல் உதவியாளர்களுக்கு, வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும் உயர்த்தப்படும்.
5) பணிக்கால தகுதி குறைப்பு:
ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் அலுவலர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் பட்டயப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு பெறுவதற்கான பணிக் காலத் தகுதி 10 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இப்பணிக் காலத் தகுதி 5 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.
6) உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கணக்குத் தேர்வு ரத்து:
பள்ளிக் கல்வித் துறை இரண்டாம் நிலை உடற்பயிற்சி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் கணக்குத் தேர்வு பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும்.
7) கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு
மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இணை பேராசியர்களாகப் பணி புரியும், 157 மருத்துவர்களுக்கு, பேராசியர் பதவி உயர்வு வழங்கப்படும். தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலியர்களில், பணி மூப்பு அடிப்படையில் 1,500 செவிலியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். பணி மூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.
8) கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு:

அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு: குணசேகரன் (இந்திய கம்யூ னிஸ்ட்): புதிய ஓய்வூதியத் திட் டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், இதேதிட்டம் நாடாளுமன்றத்தில் 2004-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் படும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் காரண மாக ஓய்வூதியத் தொகைக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் தான் பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி எங்கு இருக்கிறது? நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம்: அந்தப் பணம் அரசு கஜா னாவில்தான் இருக்கிறது. குணசேகரன்: அரசு ஊழியர் களிடம் பிடித்தம் செய்த பணம், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர் பன்னீர்செல்வம்:

பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ அறிவிப்பு

15 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 6-வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் மாவட்ட அளவில் பேரணி, அடையாள உண்ணாவிரதம், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் என பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
உடன்பாடு இல்லை
பிப்ரவரி 9-ம் தேதி அன்று ஜாக்டோ அனைத்து சங்க பிரதிநிதிகளையும், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் உடன்பாடு ஏதும் எட்டப் படாததால் அரசு ஊழியர் சங்கத் தினர் 10-ம் தேதி முதல் கால வரை யற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தில் இறங்கினர். ஆனால், ஜாக்டோ நிர்வாகிகள் கோரிக்கை கள் தொடர்பாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியி டப்படலாம் என்பதால் அதுவரை காத்திருக்க முடிவுசெய்தனர். ஆனால், 16-ம் தேதி சமர்ப்பிக் கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கை கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாத தால் ஜாக்டோ நிர்வாகிகள் ஏமாற்றத்துக்கு உள்ளானார் கள்.
ஜாக்டோ பொதுக் குழு கூட்டம்
அடுத்தக் கட்ட போராட் டம் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஜாக்டோ பொதுக் குழு கூட்டம் சென்னை யில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3.30 மணியளவில் முடிவடைந்தது.
போராட்டம் அறிவிப்பு
பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜாக்டோ மாநில தொடர்பாளர் பெ.இளங்கோவன் நிருபர்களி டம் கூறும்போது, “15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.

உயர்நீதி மன்றதீர்ப்பு பெற்ற 7879 மாணவர்களில் தமிழ் மொழியை முதன்மை மொழி பாடமாக தேர்வெழுத விரும்பினால் அவர்களை அனுமதிக்கலாம் என இணை இயக்குனர் உத்தரவு .

01.01.2016 நிலவரப்படி BT TO PG பதவி உயர்வு ஂமுன்னுரிமை பட்டியல் தயாரித்தல் -இயக்குனர்செயல்முறைகள் மற்றும் படிவம்

விடைத்தாளில் அனைத்து விடைகளையும் அடிக்கும் மாணவர்களுக்கு இரு பருவங்கள் தேர்வெழுத தடை



புதிய ஓய்வூதியத் திட்டம்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.
ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.
அமைச்சர்களின் உறுதிமொழி

ஜாக்டோ போராட்டம் அறிவிப்பு

 சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ சங்கத்தினர், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஒரு லட்சம் ஆசிரியர்களை சேர்த்து மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். பிப்ரவரி 25ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி ஒரு லட்சம் ஆசிரியர்கள் பேரணி செல்ல உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் தேர்தல் பணியை புணக்கணிப்போம் என அறிவித்துள்ளனர்.

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

சென்னை தேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித்தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டுகளை பள்ளிகளுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

பி.எப். வட்டி 8.8 சதவீதமாக உயர்வு

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விகிதம் சிறிதளவு உயர்த்தப் பட்டுள்ளது. தற்போது 8.75 சதவீத மாக இருக்கும் வட்டி விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டு 8.80 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2 நிதி ஆண்டு களாக 8.75 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. வட்டி உயர்த்தப்பட்டதன் மூலம் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடை வார்கள். நடப்பு நிதி ஆண்டில் பிஎப் அமைப்புக்கு 34,844 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9 சதவீத வட்டி கொடுத்தால்கூட உபரியாக 100 கோடி ரூபாய் பிஎப் அமைப்பிடம் இருக்கும்.

அரசு ஊழியர்களின் போராட்டம் 7-வது நாளாக தொடர்கிறது

சென்னை 
தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், காலிப் பணி யிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 10-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆறாவது நாளாக போராட்டம் நீடித்தது. 
சென்னை சேப்பாக்கம் எழில கத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் மெரினா கடற்கரையில் நடந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அப்பர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பலத்த முழக்கம் எழுப்பினர். 

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வெழுதியவர்கள் விடைத் தாள் நகல் பெற இன்று (செவ் வாய்க்கிழமை) முதல் விண் ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு மே மாதம் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதி (இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு) தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பயிற்சி மாணவர்களும், தனித் தேர்வர்களும், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் நகல் பெற இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 20-ம் தேதி வரை விண் ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற, மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் (www.tndge.in) விண் ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்துடன் அதில் குறிப் பிட்டுள்ள கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் பெற கட்ட ணம் ஒரு பாடத்துக்கு ரூ.275 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. மறுகூட்டல் கட்டணம் ரூ.205. விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் விருப்ப முள்ளவர்கள் மட்டும் மறுகூட் டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

வரும் 16-ந்தேதி பட்ஜெட் அறிவிப்பில் ஜாக்டோ கோரிக்கைகள் ஏற்பு குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் .

ஆசிரியர் சங்கங்களுடன், ஐந்து அமைச்சர்கள், பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் பேச்சு நடத்தினர். அப்போது, 'வரும், 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவரை பொறுத்திருங்கள்; அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்' என, அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதை, ஆசிரியர் சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. 'ஜேக்டோ' நிர்வாகி தியாகராஜன், ''அமைச்சர்கள் கூறியதை ஏற்று, பிப்., 16 வரை பொறுத்திருக்க உள்ளோம். அதன் பிறகும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார் 
ஜாக்டோ தரப்பில் 15 அம்சக்கோரிக்கைகளை, ஒவ்வொரு கோரிக்கையாக ஒவ்வொரு சங்கபிரதிநிதிகள் தெளிவாக எடுத்துக்கூறினர்.
அப்போது கல்வித்துறை செயலர் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டார்.
அதேசமயம் முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சர் அவர்களும் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார்.

தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்

மதுரைதகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும்உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும்வரைசிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்குசம்பளம் வழங்க வேண்டும்எனஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ.துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்குபள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்தர் தேர்ச்சி பெறாததால்நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாதுஎன கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். எஸ்தர் மற்றும் பள்ளி தாளாளர்பணி நியமனத்தை தற்காலிகமாக அங்கீகரித்துசம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை அனுமதித்து ஜன.,4 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர்துவக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுதகுதித் தேர்வைதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதியாக நிர்ணயித்துள்ளது. இதில் அரசு தலையிட முடியாது. சிறுபான்மையினர் பள்ளிசிறுபான்மையினர் அல்லாத பள்ளி என கல்வித் தகுதியை வேறுபடுத்தி பார்க்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரிஎஸ்.மணிக்குமார் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன்பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் ஆஜராயினர்.
நீதிபதிகள்
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. என அரசு வழக்கறிஞர் கூறுகிறார். அது முடிவுக்கு வரும்வரைபணியாற்றும் காலத்திற்குரிய சம்பளத்தைஆசிரியருக்கு வழங்க வேண்டும். பணியை விட்டு நீக்கக்கூடாது. பணியில் தொடர்வது என்பதுஉச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றனர். இதுபோல் தாக்கலான பல்வேறு வழக்குகளில் மனுதாரர்,எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - 5 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை

ஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு - 15 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசிட. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சந்திப்பு நாளை (09.02.2016) மாலை நடைபெறுகிறது.


பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மின்சாரத்துறை  அமைச்சர் திரு.நத்தம் விஸ்வநாதன் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் உள்ளிட்ட  5 அமைச்சர்கள் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை  செயலாளர் திருமதி.சபிதா அவர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்கின்றனர்  நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை  செயலாளர் திருமதி.சபிதா அவர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்கின்றனர்  


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வரும் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


அனுமதியில்லாமல் நீண்ட கால விடுப்பு:அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

அனுமதியில்லாமல், நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட நீண்ட கால விடுப்பில் இருந்தால் அந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியருக்கு விடுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இதை தாண்டி விடுப்பையோ அல்லது எந்தத் தகவலும் அளிக்காமலோ இருந்தால் அவர் மீது அரசுப் பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அரசு ஊழியர்கள் போதிய தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக, விடுப்புக்காக விண்ணப்பிக்கும்போது, தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விடுப்பின் அளவை ஊழியர்கள் தெரிந்திருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட விடுப்பானது, விண்ணப்பத்துடன் உரிய உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும். அதில் ஏதேனும் தாமதம் ஏற்படக்கூடாது.
சம்பளத்துடன் கூடிய விடுப்பு ஏதும் இல்லாவிட்டால், ஊதியம்-இதர படிகள் இல்லாமல் விடுப்பினை அரசு ஊழியர்களுக்கு அனுமதிக்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதில் ஏதேனும் விளக்கங்கள், தகவல்கள் தேவைப்படுமானால் அவற்றை தலைமைச் செயலகத்தில் உள்ள துறைத் தலைமை உடனடியாக அளிக்க வேண்டும்.
ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அவர் தனது பணிக்காலத்தில் எடுத்த விடுப்புகள் எவ்வளவு, மீதமுள்ள விடுப்புகள் விவரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் சரியாகத் தெரிவிக்க வேண்டும்.
இதன்மூலம், ஓய்வூதியம் பெறுவதற்காக அரசு ஊழியர் அனுப்பும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் எந்தத் தாமதமும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது.

900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் -ஜனவரி 2015 மாத ஊதியம் வழங்குவதற்கான ஆணை

1590 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் -ஜனவரி 2016 மாத ஊதியம் வழங்குவதற்கான ஆணை

TEMPORARY POSTS CONTINUATION ORDER-FOR A PERIOD OF 3 MONTHS FROM JAN-2016

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் ஆசிரியர்கள் கைதாகி விடுதலை

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் இன்று 3-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னதாக, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ மாநில தொடர்பாளர் பி.இளங்கோவன் அறிவித்தார். அதற்குப் பிறகும் அரசு ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் ஏற்கெனவே அறிவித்த படி 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. கடைசி நாளான இன்றும் மாவட்ட அளவில் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடந்தது.
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 11 மணியளவில் போராட்டம் நடந்தது. ஜாக்டோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்-இயக்குநர் சங்க மாநிலத் தலைவருமான எஸ்.சங்கரப்பெருமாள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் திடீரென சாலையில் உட்கார்ந்து கோஷமிடத் தொடங்கினர். தொடர்ந்து, அவர்கள் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜாக்டோ சார்பில் மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.