அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

DECEMBER 2016 SSLC TIME TABLE09.12.2016   FRIDAY    LANGUAGE PAPER - I
10.12.2016   SATURDAY   LANGUAGE PAPER – II14.12.2016  WEDNESDAY   ENGLISH PAPER – I15.12.2016  THRUSDAY   ENGLISH PAPER –II17. 12.2016  SATURDAY   MATHEMATICS19. 12.2016    MONDAY  SCIENCE
21. 12.2016 WEDNESDAY  OPTIONAL LANGUAGE
23. 12.2016  FRIDAY  SOCIAL SCIENCE

DURATION:
10:00 a.m. to 10:10.a.m - Reading the question paper
        
10:10 a.m. to 10:15 a.m - Filling up of particulars in the answer  sheet
              10:15 a.m. to 12:45 p.m - Duration of Examination


HIGHER SECONDARY +2 HALF YEARLY COMMON  EXAMINATIONS
DECEMBER 2016 TIME TABLE
07.12.2016  WEDNESDAY   PART - I  LANGUAGE PAPER – I
08.12.2016  THURSDAY  PART – I  LANGUAGE PAPER – II
09.12.2016  FRIDAY  PART - II  ENGLISH PAPER - I
10.12.2016  SATURDAY  PART – II ENGLISH PAPER - II
14.12.2016 WEDNESDAY PART - III
MATHEMATICS / MICRO BIOLOGY / ZOOLOGY / NUTRITION &DIETETICS/ TEXTILES DESIGNING / FOOD MANAGEMENT & CHILD CARE / AGRICULTURE PRACTICE / POLITICAL SCIENCE / NURSING (VOCATIONAL) / NURSING (GENERAL) / ACCOUNTANCY & AUDITING (THEORY)
15.12.2016 THURSDAY  PART -III
COMMERCE / HOME SCIENCE/ GEOGRAPHY
16.12.2016  FRIDAY  PART - III
COMMUNICATIVE ENGLISH/ INDIAN CULTURE/ COMPUTER SCIENCE / BIO CHEMISTRY / ADVANCED LANGUAGE (TAMIL) /  STATISTICS
19.12.2016  MONDAY  PART –III
PHYSICS / ECONOMICS / GENERAL MACHINIST / ELECTRONICS EQUIPMENT / DRAUGHTSMAN CIVIL / ELECTRICAL MACHINES AND APPLIANCES / AUTO MECHANIC/ TEXTILE TECHNOLOGY/ OFFICE MANAGEMENT
21.12.2016 WEDNESDAY PART –III
CHEMISTRY / ACCOUNTANCY
23.12.2016 FRIDAY PART –III
BIOLOGY / BOTANY / HISTORY/ BUSINESS MATHEMATICS
Practical Examinations should be conducted under the General and Vocational streams including Typewriting (Tamil & English) before the commencement of Half yearly Common Examinations.
Duration  :10:00 a.m. to 10:10.a.m - Reading the question paper
      10:10 a.m. to 10:15 a.m - Filling up of particulars in the answer sheet
     10:15 a.m. to  01:15p.m - Duration of Examination


நவ., 17ல் ஆர்ப்பாட்டம் : ஆசிரியர்கள் அறிவிப்பு

சென்னை: அகவிலைப்படி உயர்வுக் கோரி, தமிழகம் முழுவதும், நவ., 17ல், ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது: மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வுக் கோரி, மனுக்கள் அளித்துள்ளோம்; அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எட்டாவது ஊதியக் குழுவை ஏற்படுத்துதல், அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைத்தல், தேர்வு பணிகளுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 17ல், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

'ஆதார்' எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு

ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டங்கள், பல அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகள் மூலம், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், முறைகேடுகளை தடுக்கவும், போலி ஆவணங்கள் பெயரில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை தவிர்க்கவும், மாணவர்களின் ஆதார் எண்ணை பதியும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை கிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.

அனைத்து மாணவர்களுக்கும், இன்னும் ஆதார் எண் வழங்கப்படாததால், பல லட்சம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், கல்வி உதவித்தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கல்லுாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஆதார் எண் இல்லை என, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது.

'ஆதார் எண் இல்லா தோர், முகவரி அடையாள சான்றுடன், வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட துறைகள் உதவித்தொகை வழங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் : பள்ளி கல்வித்துறை

 காவரி நீர் பிரச்னைக்காக தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படஉள்ளது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போரட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும், திட்டமிட்ட படி காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு: செப்.8 தொடங்கி 23-ம் தேதி முடிவடைகிறது

 எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன. இடையில் 13-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) பக்ரீத் விடுமுறை விடப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும்.
எஸ்எஸ்எல்சி தேர்வு விவரம்:
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.10 (சனி) - மொழித்தாள்-2
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் முதல்தாள்
செப்.14 (புதன்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.16 (வெள்ளி) - கணிதம்
செப்.19 (திங்கள்) - அறிவியல்
செப்.21 (புதன்) - விருப்ப மொழி
செப்.23 (வெள்ளி) - சமூக அறிவியல்
பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகளும் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
பிளஸ் 2 தேர்வு விவரம்:
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.9 (வெள்ளி) - மொழித் தாள்-2
செப்.10 (சனி) - ஆங்கிலம் முதல் தாள்
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.14 (புதன்) - வணிகவியல், மனையியல், புவியியல்
செப்.15 (வியாழன்) - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், அரசியல் அறிவியல், கணக்கியல், தணிக்கையியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.16 (வெள்ளி) - இந்திய பண்பாடு, கணினி அறிவியல், உயிரி-வேதியியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.19 (திங்கள்) - இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை உள்ளிட்ட பாடங்கள்
செப்.21 (புதன்) - வேதியியல், கணக்குப்பதிவியல்
செப்.23 (வெள்ளி) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது. இதன்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 2010 ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்து வதற்காக இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களுக்கு பொருந்தாது என்று கூறி யுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம். அதற்காக அந்தப் பள்ளிகளின் தன் மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கட்டாயமாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிர்பந்தம் செய்ய முடியாது.
எனவே அரசு உதவிபெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெறவேண் டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது. மேலும் 2010-ல் பணிக்கு சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக் குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வில்லை எனக்கூறி அவர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த சம்பளத் தொகையை 2 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசைப் போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை யும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பொருந்தாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்களுக்கு, ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு, அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தேதியை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை கிருஷ்ண ஜெயந்தி மற்றும், 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது. இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆறு நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

மாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்

மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. ஆங்கில வழி வகுப்பு களிலும், மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட வில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

காரணம் என்ன : ஐந்து ஆண்டுகளில், ஏராள மான புதிய தொடக்க பள்ளி துவங்கப்பட்டன. நடுநிலை- உயர்நிலையாகவும், உயர்நிலை- மேல்நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், புதிய பணியிடம் உருவாக்கப்பட்டன.
இப்பள்ளிகளில், வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு எதிர்பார்த்தது. மாறாக குறைந்ததால் ஆசிரியர் 'சர்பிளஸ்' ஏற்பட்டது. மேலும் ஆங்கில வழி கல்வியிலும் குறைந்தபட்சம், 15 மாணவர் இல்லாத வகுப்புகளின் ஆசிரியர்களும், 'சர்பிளஸ்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை

தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் பெற்றிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து மாறி செல்லக்கூடாது. அந்த இடத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தால் மட்டுமே, ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும்கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளதால், இந்த மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்ற ஆசிரியர்களும், தங்கள் இடத்திற்கு, வேறு ஆசிரியர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது;

ஆசிரியர்களின் பள்ளி வருகையை யும், பள்ளியில் இருப்பதையும் உறுதிப்படுத் தவும், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேடு முறைக்கு, கடந்த ஆண்டே கல்வித் துறை திட்டமிட்டது. தேர்தலால் இந்த அறிவிப்பு தள்ளி போடப்பட்டு, சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டது.
புதிய திட்டம் குறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பி.பேட்ரிக் ரைமண்ட் கூறும் போது, ''ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் திட்டம் வருவது வரவேற்கத்தக்கது. இந்த திட்டம் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, மின்னணு கல்வி மேலாண்மை, கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ் போன்ற திட்டங் களுக்கு தகவல் தொகுப்பாக பயன்படுத்த எளிதாக இருக்கும்,'' என்றார்.

வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது

. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட உத்தரவிட்டுள்ளனர்.

அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாற்றம் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 168 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 86 பேருக்கு மட்டும் விருப்பமான இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள, 82 பேர் தலைமை ஆசிரியர்களாகவே பணியை தொடர விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு இன்னும், மூன்று ஆண்டுகளுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை. ஆனால், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இணையான ஊதியம், சலுகை பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை

பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
காலாண்டு தேர்வுக்கு முன், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும், சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளன. அது போன்ற பள்ளிகளுக்கு, 'பொதுத்தேர்வு மாணவர்கள், நல்ல முறையில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்; சுற்றுலா அழைத்துச் சென்று நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுலா செல்லும் பள்ளிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடத்தை சுவாரஸ்யமாக படிக்க உதவும் புதிய செயலியை ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடங்களை சுவாரஸ் யமாகவும் விரைவாகவும் கற்க உதவும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதுமை யான டிவிடி-யை 6 ஆயிரம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வியின் தரத்தை மேம் படுத்தவும், கற்பித்தல், கற்றல் பணியில் புதுமையான முறைகளை கொண்டுவரவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களின் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
10, 12-ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடங்களை சுவாரஸ்மாகக் கற்கும் வண்ணம், பட உட்கிரகிப்பு தொழில்நுட்பத்தைப் (Image Recognition Application Technology) பயன்படுத்தி மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் புதிய செயலியை (tn schools live) உருவாக்கியுள்ளது. செல்போனில் (ஆண்ட்ராய்டு) கூகுள் பிளே ஸ்டோரில் (tn schools live) இருந்து இந்த செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முப்பரிமாணம்

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் துவக்கம்!

தொடக்க பள்ளிகளில்மூன்று லட்சம் ஆசிரியர் பணியிடங்களுக்கானவிருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்இன்று துவங்குகிறது. 
முதல் நாளான இன்றுஉதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. நாளைநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குஉதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, 6ம் தேதிபட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதில் தான்ஒவ்வொரு ஆண்டும் உள்ளடி வேலைகள் அதிகமாகிஆங்காங்கே முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 
இதேபோலஇடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிலும்தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாககடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஆண்டுகாலி இடங்களை மறைத்து,அதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மறைமுகமாக இடமாறுதல் வழங்கக் கூடாது எனஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற்றம்

ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களில், 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். மாநிலமாவட்ட அளவிலும்அதிக மதிப்பெண் பெற்றுமுதல் மூன்றுரேங்க்களை பெறுகின்றனர்.
ஆனால்இதுபோன்று ரேங்க் பெறும் மாணவ,மாணவியர் உட்படஅதிக மதிப்பெண் பெற்றவர்கள் பலர்பிளஸ் 1 பாடங்களை படிப்பதில் திணறுவது தெரியவந்து உள்ளது. குறிப்பாககணிதம் மற்றும் உயிரியலில்,மாணவர்களின் கற்கும் திறன் மிகவும் மந்தமாக உள்ளதாகபள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்துஆசிரியர்கள் கூறியதாவது: 
பத்தாம் வகுப்பு முடித்துபிளஸ் 1 சேரும் மாணவர்களில் பலர்அடிப்படை கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். வெறும் மனப்பாடமாக படித்து விட்டு வருவதால்பிளஸ் 1ல் திணறுகின்றனர். இதற்கு, 10ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் திருத்தும் முறை தான் முக்கிய காரணம். தேர்ச்சி விகிதத்தை அதிகமாக காட்டஅதிகாரிகள் உத்தரவிடுவதால்ஆசிரியர்கள்தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப,மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனர். 
மேலும்விடைத்தாளுக்கு மறுமதிப்பீடும் இல்லை என்பதால்ஆசிரியர்கள் எந்த தடையும் இல்லாமல்,திருத்தும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்துதேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வகையான மாற்றம் என்பதை,ஆசிரியர்கள்வல்லுனர்கள் கொண்ட குழு முடிவு செய்யும் என்றனர்.

வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்'

'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன், மாணவர்களை வரச்செய்து, தேர்வு நடத்த வேண்டும். விடைத்தாள்களை அன்றே திருத்தி, மதிப்பெண் அறிவிக்க வேண்டும். பருவத் தேர்வு விடைத்தாள்கள், வேறு பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்டு, பணி மதிப்பீடு செய்யப்படும் என, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தினர் சிலர், 'டேம்ஸ்' என்ற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின், வாட்ஸ் ஆப்பில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு ஆலோசனை நடத்தினர். அந்த பதிவுகளை சிலர், கல்வி அதிகாரிகளுக்கு 'இ-மெயில்' அனுப்பி உள்ளனர்.இதையடுத்து, பாரதிராஜா, நடராஜன், முருகேசன் மற்றும் லிங்கத்துரை என, நான்குஆசிரியர்களுக்கு, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில், 'அரசு மற்றும் மாவட்ட நிர்வாக ரீதியான செயல்பாடுகளை, வாட்ஸ் ஆப்பில் விமர்சனம் செய்வது, அரசு பணியாளர் நடத்தை விதிகளுக்கு முரணானது. ராமநாதபுரம் கலெக்டர் விசாரணை நடத்த உள்ளதால், அவர் முன் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றால், துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.இவர்களில், பாரதிராஜா, தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் முருகேசனும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்.இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிஜெயக்கண்ணுவிடம் கேட்டபோது, ''எனக்கு இதுப்பற்றி எதுவும்தெரியாது. மாவட்ட கலெக்டர், 'மெமோ' கொடுக்க சொன்னார்.கருத்துரிமையை நான் எதிர்க்கவில்லை,'' என்றார்.

இதற்கிடையில், வாட்ஸ் ஆப்பில் விவாதித்ததால், நோட்டீஸ் அளித்த சம்பவத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கங்கள், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.கல்வித்துறை அதிகாரிகளிடம், அதிகார போக்கு அதிகரித்துள்ளது. ஆசிரியர்களிடம் எதற்கும்கருத்து கேட்பது இல்லை. வாட்ஸ் ஆப் குரூப் என்பது பூட்டிய வீட்டிற்குள், உறுப்பினர்கள் பேசிக்கொள்வது. அதை எட்டிப் பார்த்து நட வடிக்கை எடுப்பது அநாகரிக செயல். அடக்கு முறை செய்தால், மீண்டும் இயக்கங்களை இணைத்து போராட வேண்டியிருக்கும்.கே.பி.ஓ.சுரேஷ், மாநில தலைவர்,தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்ஆசிரியர்கள், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங் களில் கருத்து தெரிவிக்கும் போது எச்சரிக்கை தேவை. இதுபோன்ற செயல்பாடுசிக்கலை ஏற்படுத்தும். தங்கள் குறைகளை அதிகாரிகளை சந்தித்து கூற வேண்டும்.

சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர்,தமிழ்நாடு உயர், மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்கம்

ஆக.,2ல் காஞ்சிபுரத்தில் உள்ளூர் விடுமுறை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 2 ம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13ம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் கெஜலெட்சுமி அறிவித்துள்ளார்

மாணவர்களுக்கு தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:

தேசியக் கொடியை, மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மூலம் தயாரித்து பயன்படுத்தக் கூடாது.
அரசு அறிவிப்பின்றி, அரை கம்பம் அல்லது முக்கால் கம்பத்தில், பறக்க விடக் கூடாது. இரவு நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.
தேசியக் கொடிக்கு சரியான முறையில், 'சல்யூட்' செய்தல் வேண்டும்.
கொடியின் மேல்பக்க காவி நிறத்தை, உள்நோக்கத்துடன் தலைகீழாக பிடித்தல், தரையில் மண் படும்படி இழுத்தல் கூடாது. பழைய சாயம் போன, கிழிந்த கொடியை பயன்படுத்த கூடாது.
கொடியை தங்கள் உடையின் ஒரு பகுதியாகவோ, இடுப்பு கீழ் அணியும் உடையாகவோ, ஆபரணம், அலங்காரமாகவோ பயன்படுத்த கூடாது.
இந்த விதிகளை பின்பற்ற, மாணவர்கள், பள்ளி, கல்லுாரி ஊழியர், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விதிகளை மீறுவோருக்கு, குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்க, சட்டத்தில் இடம் உள்ளது என, எச்சரிக்கப்பட்டுள்ளது

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்தல் - ஆய்வு செய்யும் நிபுணர் குழுவின் பதவி காலம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு-அரசாணை

அடிப்படை திறன் மேம்படுத்த ஆய்வு ! கோவை மாவட்டத்தில் 650 பள்ளிகள் தேர்வு

கோவை: தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 23 ஆயிரத்து 815 தொடக்கப்பள்ளிகள் மற்றும், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, எ.பி.எல்., எனப்படும் செயல்வழி கற்றல் அட்டை மூலம், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஆசிரியர்களுக்கே அதிக எழுத்துப்பணி இருக்கும்.
இதனால், மாணவர்களின், எழுத்து, வாசிப்பு திறன் மற்றும் கணிதத்தில் எளிய கூட்டல், கழித்தல் முறைகளை பின்பற்றுவதில், பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இது, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில், தேர்வை எதிர்கொள்ளுதல், தேசிய திறனாய்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்க தடையாக இருப்பதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த, தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி, பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி, கடந்தாண்டில் கோவை மாவட்டத்தில், 1,300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடந்தது.
இதில், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன், 35 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. பின், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி அளித்து, கற்றல் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
நடப்பாண்டில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில், முதற்கட்ட ஆய்வில், 650 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் இறுதி வரை, மாணவர்களுக்கு எளிய பயிற்சிகள், தேர்வுகள் நடத்தி, கற்றல் திறன் குறித்து, அறிக்கை தயாரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்,''கோவை மாவட்டத்தில், மொத்தமுள்ள, 15 வள மையங்களில் பணிபுரியும், ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதிக்கப்படும். எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வார்த்தைகள் எழுதுதல், எளிய கணித முறைகளில், அடிப்படை திறன் ஆய்வு செய்யப்படும். இதன் முடிவுகள், செப்டம்பர் மாதத்திற்குள் தயாரித்து, அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்,'' என்றார்.

இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல்

பொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை: ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது. இந்தாண்டில் கலந்தாய்வு விதிமுறையில் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. இதன்படி 1.6.2015க்கு முன் பணியேற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்தாண்டு கலந்தாய்வு ஆகஸ்டில் தான் நடந்தது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் 1.6.2015க்கு பின் தான் பணியேற்றனர். இந்த விதியால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது:
புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் நடக்கவுள்ள கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. 1.6.2015ல் கலந்தாய்வு நடந்திருந்தால் இந்த விதிமுறை சரியாக இருக்கும். ஆனால் ஆகஸ்டில் தான் கலந்தாய்வு நடந்தது.மேலும் சென்றாண்டு தலைமையாசிரியர்களாக பதிவு உயர்வு பெற்றவர்களுக்கும் கலந்தாய்வில் எவ்வித தளர்வும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு இதுவும் ஏமாற்றமான விஷயம் தான். சம்பந்தப்பட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு வந்து அனைவரும் பங்கேற்க கல்வித்துறை வாய்ப்பளிக்க வேண்டும். மேலும் இக்கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின்
பட்டியல் மற்றும் ஆசிரியர் பணியிடங்களையும் வெளியிட்டு கலந்தாய்வில்

முறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து; குற்ற வழக்கும் பாயும்

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வை ரத்து செய்யவும், அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணே, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில் சேர்வதற்கான அடித்தளமாக உள்ளது. எனவே, இன்ஜி., மற்றும் மருத்துவ, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற வைப்பதில், தனியார் பள்ளிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்காக, பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத் துறையின் அலுவலக உதவியாளர் முதல், மேலதிகாரிகள் வரை, தனியார் பள்ளிகளின் சார்பில், தேர்வுக்கு தேவையான உதவிகளை பெற முயற்சிக்கின்றனர். இதற்கு சில உதவியாளர்கள், ஆசிரியர்கள் துணை போகின்றனர். இந்த ஆண்டு, தனியார் பள்ளிகளுக்கு துணை போன புகாரில், ஆசிரியர்கள் பலர் சிக்கியுள்ளனர். முதற்கட்டமாக, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்களின் விடைத்தாளை ஆள் மாறாட்டம் செய்து எழுத உதவியதாக, நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதவிர, பல தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு, 'பிட்' கொடுத்து உதவிய ஆசிரியர்களின் பட்டியலும் தயாராகி உள்ளது. அவர்களில் பலருக்கு, முதற்கட்டமாக விளக்கம் கேட்டு,
'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். விளக்கம் வந்ததும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட உள்ளனர். புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியலை, தேர்வுத் துறையின் உத்தரவை அடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்,
தமிழக பள்ளிக்கல்வித் துறை தலைமைக்கு அனுப்பியுள்ளனர். புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை ரத்து
செய்யவும், அவர்களின் குற்ற தன்மைக்கு ஏற்ப, போலீஸ் மூலம் குற்ற வழக்கு பதிவு செய்யவும், அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பிளஸ் 2 'பாஸ்' மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம்

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே, வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை செய்துள்ளது.
இது குறித்து, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர் கூறியதாவது: கடந்த, 2011 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை, தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக நேரடியாக இத்துறையின், https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம், ஐந்து ஆண்டுகளில், 35 லட்சம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டிற்கான, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வரும், 18ல் வழங்கப்படுகிறது. அன்று முதல் வரும் ஆக., 1ம் தேதி வரை, 15 நாட்களுக்கு ஜூலை, 18ம் தேதி நாளையே பதிவு மூப்பு தேதியாக, மாணவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகமும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து செய்துள்ளன. தமிழகத்தில் உள்ள, 3,893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
மாணவர்கள், 'ஆதார்' அட்டை எண், குடும்ப அட்டை, மொபைல் போன் எண், 'இ - -மெயில்' முகவரி போன்ற விபரங்களை, மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாள் அன்று எடுத்து வர வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும், அனைத்து மாணவர்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மெட்ரிக், சி.பி.எஸ்.இ., படித்த மாணவர்களும் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின், https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில், 'ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யலாம் அல்லது தங்கள் மாவட்டத்திற்கு உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளிகளை சுற்றி நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை

அரசு பள்ளிகளை சுற்றி, மாணவர்கள் உடல்நலனை பாதிக்கும் நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
வறுத்த உணவு, சிப்ஸ், குளிர்பானம், நுாடுல்ஸ், பீட்ஸா, பர்கர், உருளைக்கிழங்கு பிரை, சாக்லேட், சமோசா உள்ளிட்ட கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகமுள்ள நொறுக்கு தீனி, உணவுகளை, பள்ளி வளாகத்துக்குள்ளும், பள்ளியை சுற்றி, 200 மீட்டர் துாரத்திலும்
விற்பனை செய்யக் கூடாது. இதை, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் செயல்படும் கேன்டீனுக்கு பெற்றோர், ஆசிரியர், மாணவர்களை கொண்ட மேற்பார்வை குழு அமைத்து, ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே மாணவர்களுக்கு கிடைப்பதை கண்காணிக்க வேண்டும். உணவு தயாரிப்பில் தரமான முறையை பின்பற்ற ஆய்வு நடத்த வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.வாரத்துக்கு, குறைந்தபட்சம் இரு பாடவேளை, விளையாட்டுக்கு ஒதுக்கி, உடல்திறன் மேம்படும் வகையில் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்த வேண்டும்.
வீடுகளிலும் மாணவர்கள், அதிக நேரம், 'டிவி' பார்ப்பதை தவிர்த்து, உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுகளில் கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது. 

பணிப் பதிவேட்டில் பதிவு செய்தல் -பொதுவான வழிகாட்டி நெறிமுறைகள் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் 08.07.2016

ஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு:விண்ணப்பங்களை ஜுலை 19 முதல் 28 வரை சமர்ப்பிக்கலாம் .


தொடக்கக் கல்வி துறை
3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்  
4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 
6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
7.8.16 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு 
20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)  
21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் 
பள்ளிக்கல்வித்துறை
6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு  
7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 
13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் 
20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு
23.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
24.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்
03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
06.9.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

18ம் தேதி 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ், வரும் 18 ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகள் : களைய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

மதுரை: 'அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய, அரசு பேச்சு நடத்த வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநில பொது செயலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரசு நீடித்துள்ளது. 'புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகளுக்கு ரூ.4 லட்சம் மீண்டும் வழங்கப்படும்' எனவும் அறிவித்துள்ளது. 'கட்டணமில்லா சிகிச்சை' என அறிவித்து விட்டு, 'கண் புரை அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.45 ஆயிரம்தான் வழங்க முடியும்' என அறிவித்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். இது கட்டணமில்லா சிகிச்சை நோக்கத்திற்கு எதிரானது. சந்தா தொகை ரூ.120 என்பதை ரூ.180 ஆக உயர்த்தியது ஏற்புடையது அல்ல. சந்தா தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டம் குறித்து ஊழியர் சங்கங்களுடன், அரசு பேச வேண்டும். திட்டத்தில் சேருவது குறித்து விருப்புரிமை கோர வேண்டும். மத்திய அரசு, தெலுங்கானா, கர்நாடகா போன்று இத்திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

அரசு பள்ளிகளிலும் இனி 'ஆன்லைனில்' பாடம் : தயாராக 770 வகுப்பறைகள்

மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும் 'ஆன்லைனில்' பாடம் நடத்திட மாநில அளவில் 770 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 'மெய்நிகர் கற்றல் வகுப்பறை' (வெர்சுவல் கிளாஸ் ரூம்) அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்திட கல்வித்துறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புரொஜெக்டர், கணினி ஸ்கிரீன், இன்டர்நெட், 'பவர் பாயின்ட்' போன்ற வசதியுடன் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, மத்திய அரசு நிதியுதவிடன் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் 'மெய்நிகர் கற்றல்' வகுப்பறைகள் தமிழக அரசு பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக 770 பள்ளிகள், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) இவ்வகுப்பறைகளை அமைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) ஈடுபட்டுள்ளது. இவ்வகுப்பறையில் ஹார்டுவேர் கணினி, வெப் ேகமரா, புரொஜெக்டர், மெகா ஸ்கிரீன், நவீன ஆடியோ சிஸ்டம், அதி விரைவு இன்டர்நெட் இணைப்பு, பிரத்யேக மென்பொருள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் இவ்வகுப்பறை வசதி உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தவும், பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த சிறப்பு வல்லுனர்கள் பயிற்சி வகுப்பு நடத்தவும் பயன்படுத்தப்படும். மேலும் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடங்கள் தொடர்பாக எஸ்.சி.இ.ஆர்.டி., தொகுத்துள்ள 200க்கும் மேற்பட்ட வீடியோ தொகுப்புகள் காட்சிப்படுத்தப்படும். உதாரணமாக 'இருதயம்' பாடம் என்றால் அதன் அமைப்பு, செயல்பாடு குறித்து 'யூ டியூப்' வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல், வரலாறு, முக்கிய இடங்கள், அனிமேஷன் கலந்த காட்சி தொகுப்பு வீடியோக்களையும் எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரித்துள்ளது. இவை மெய்நிகர் கற்றல் வகுப்பறையில் மாணவர்களுக்கு காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்.சி.இ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: நவீன தொழில் நுட்பங்களை அரசு பள்ளி மாணவர்களும் தெரிந்துகொள்ள 'வெர்சுவல்' வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் நடத்தலாம். தேர்வு நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும். இவ்வகுப்புகளில் கற்றல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டில்லி 'எர்னட்' மற்றும் 'ரிக்கோ' நிறுவனம் சார்பில் ஆக., 4 முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது, என்றார்.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையைஅரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணைஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும்அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள்ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின்வாட்ஸ் ஆப்களில் வலம் வருகின்றன.
அரசாணை அம்சங்கள்
உபரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்த பின்னரேபொது மாறுதல் நடத்த வேண்டும். பொது இடமாறுதல் நடக்கும் முன்பரஸ்பர விருப்ப இடமாறுதல்களை நடத்த வேண்டும். தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்குமுதலில் ஒன்றியம்நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் இடமாறுதல் வழங்க வேண்டும். பின்மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்க வேண்டும்.
உயர்மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்வருவாய் மாவட்டத்திற்குள் முதலிலும்பின்மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் வழங்க வேண்டும் கண் பார்வையற்றவர்மாற்றுத்திறனாளிராணுவ வீரர்களின் துணைவியர்இதய அறுவை சிகிச்சைசிறுநீரக அறுவை சிகிச்சைபுற்றுநோயாளி,கணவனை இழந்தோர், 40 வயது கடந்த முதிர் கன்னியர்மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தர வேண்டும்
கணவன்மனைவி என்றால் இருவரில் ஒருவர் பணிபுரியும் இடத்திலிருந்து, 30 கி.மீ.,க்கு அப்பால்,இன்னொருவர் பணியாற்றினால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். கணவன்மனைவி என்ற அடிப்படையில்கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள்அதே தகுதியில்மூன்று ஆண்டுகளுக்கு மாறுதல் பெற முடியாது. இவ்வாறு பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.
தயக்கம் ஏன்
ஆசிரியர்களின் இடமாறுதல் விதிகளுக்கான அரசாணை நகல்கள்கல்வித் துறை வட்டாரத்தில் வலம் வருகின்றன. ஆனால்கல்வித்துறை இயக்குனர்கள்இணை இயக்குனர்கள் போன்ற அதிகாரிகளுக்கு,அரசாணை விவரமே தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கஅதிகாரிகள் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையைஅரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணைஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும்அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள்ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின்வாட்ஸ் ஆப்களில் வலம் வருகின்றன.
அரசாணை அம்சங்கள்
உபரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்த பின்னரேபொது மாறுதல் நடத்த வேண்டும். பொது இடமாறுதல் நடக்கும் முன்பரஸ்பர விருப்ப இடமாறுதல்களை நடத்த வேண்டும். தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்குமுதலில் ஒன்றியம்நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் இடமாறுதல் வழங்க வேண்டும். பின்மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்க வேண்டும்.
உயர்மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்வருவாய் மாவட்டத்திற்குள் முதலிலும்பின்மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் வழங்க வேண்டும் கண் பார்வையற்றவர்மாற்றுத்திறனாளிராணுவ வீரர்களின் துணைவியர்இதய அறுவை சிகிச்சைசிறுநீரக அறுவை சிகிச்சைபுற்றுநோயாளி,கணவனை இழந்தோர், 40 வயது கடந்த முதிர் கன்னியர்மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தர வேண்டும்
கணவன்மனைவி என்றால் இருவரில் ஒருவர் பணிபுரியும் இடத்திலிருந்து, 30 கி.மீ.,க்கு அப்பால்,இன்னொருவர் பணியாற்றினால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். கணவன்மனைவி என்ற அடிப்படையில்கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள்அதே தகுதியில்மூன்று ஆண்டுகளுக்கு மாறுதல் பெற முடியாது. இவ்வாறு பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.
தயக்கம் ஏன்
ஆசிரியர்களின் இடமாறுதல் விதிகளுக்கான அரசாணை நகல்கள்கல்வித் துறை வட்டாரத்தில் வலம் வருகின்றன. ஆனால்கல்வித்துறை இயக்குனர்கள்இணை இயக்குனர்கள் போன்ற அதிகாரிகளுக்கு,அரசாணை விவரமே தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கஅதிகாரிகள் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

5 மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்ட ஆய்வு குழு : அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

சிவகங்கை: புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5 மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் 2003 ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த புதிய பென்ஷன் திட்ட சந்தா,அரசு பங்கு தொகை என, மொத்தம் ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர். சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. இந்த குழு அறிக்கைப்படி பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது.
வல்லுனர் குழு செயல்பாடு குறித்து திண்டுக்கல் மாவட்டம் எரியோடு ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் சில விபரங்களை பெற்றுள்ளார்.
அதன்படி வல்லுனர் குழு மார்ச் 28 ல் ஒருமுறை மட்டும் கூடியுள்ளது. அதிலும் உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் பங்கேற்கவில்லை. மேலும் 5 மாதங்களில் இதுவரை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியை கூட சந்திக்கவில்லை. மேலும் அந்த குழுவிற்கு தகவல் தெரிவிக்க 'இமெயில்' கூட இல்லாதது தெரியவந்துள்ளது.
பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: 2016 ஜூன் 22 வரை புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு 1,433 பேர் விண்ணப்பித்தனர். இதில் 245 பேருக்கு
மட்டுமே பணப்பலன்
கிடைத்துள்ளது.
இதனால் வல்லுனர் குழுவின் முடிவை எதிர்பார்த்து அரசு ஊழியர், ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் வல்லுனர் குழு முறையாக செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது, என்றார்.

இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்.

இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்
எழுந்துள்ளதால், வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளி
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட
வாரியாக தேர்வுக்குழு அமைத்து, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். 'கடந்த ஆண்டு விருது வழங்கியதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விதிகள் பின்பற்றப்படவில்லை; தேர்வுக் குழுவில் இருந்த அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 'அப்போது என்ன பதில் அளிப்பது' என, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம், உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, 'விதிமுறை பின்பற்றப்படவில்லை என்பது நிரூபணமானால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான உண்மை நிலை அறிக்கை அடுத்த வாரம், தமிழக அரசு சார்பில், பதில் மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது' என்றனர். இதற்கிடையில், இந்த ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள் ஜூலை, 20ம் தேதி வரை ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. பரிசீலனை முடிந்து, ஆக., 1ல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து, பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்துக்கு பட்டியல் அனுப்ப,
உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் முறை!

தமிழகத்தில் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் மாணவர்களுக்கான விரல் வருகை பதிவேடு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டம் நடைமுறையில் இருப்பதால், கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கான முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 8 அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, இத்திட்டம் விரைவில் மாவட்ட முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும், இதனால் மாணவர்களை ஆசிரியர்கள் எளிதாக கண்காணிக்க முடியும் என்று தெரிவித்தார்.

கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் பெறும் ஆசிரியர்களுக்கு புதிய நிபந்தனை!

கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டுமென பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர் பணியிடை மாற்றம் கோரி விண்ணப்பிப்பர். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் அடிப்படையில், மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம்.  

இதற்காக தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தப்பட்சம் மாவட்டம் அளவில் பணிநிரவல் நடைபெறுவதும், சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை வேறு மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்படுவதும் வழக்கம்.  

இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் நடத்திய பின் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் திருண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் மாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட இடங்களில் பணிபுரிய வேண்டும் என்றும், கடந்த கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள் நடப்பு கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது எனவும் கடுமையான விதிமுறைகள் அரசாணையாக வெளியிடபட்டுள்ளது.