ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை, 15ம் தேதி துவங்கவுள்ளதாக, 'வாட்ஸ்- ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிவருவதால், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை, 15ம் தேதி துவங்கவுள்ளதாக, 'வாட்ஸ்- ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிவருவதால், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது
.
                ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கு ஏப்., மாதம் விண்ணப்பங்கள் பெற்று, மே இறுதியில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்.நடப்பு கல்வியாண்டில், தேர்தல் காரணமாக கலந்தாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறும் முதல்கட்ட பணிகள் கூட, இதுவரை துவக்கப்படவில்லை என்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.கலந்தாய்வு தேதி அறிவிப்பை ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ள சூழலில், ஜூலை, 15 முதல் கலந்தாய்வு துவங்குவதாகவும், 15ம் தேதி உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், 16ம் தேதி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 17ம் தேதி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 18ம் தேதி ஆசிரியர்களுக்கும் நடக்கவுள்ளதாகவும், 'வாட்ஸ் ஆப்'ல் அவசர செய்தியாக பரவிவருகிறது. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

            தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் சாமிசத்யமூர்த்தி கூறுகையில், ''இதுவரை, கலந்தாய்வு தேதிகுறித்த அதிகாரி அறிவிப்புகள் வெளிவரவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையானதல்ல. விரைவில் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக தேதியை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை

'ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என,
பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில், 2002 முதல் பல்வேறு கட்டங்களில் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி

ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்த பின், தேர்வு நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு பெற்றால், அடிப்படை ஊதியத்தின், இரு மடங்கு அளவுக்கு ஊதியம்

வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 10 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை உத்தரவு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நடைமுறையில் பலவித

விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 'தேர்வு நிலை உத்தரவு வழங்கும் முன், ஆசிரியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு

பிறப்பித்தனர். ஆனால், 40 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை வருவதில் இழுபறி ஏற்பட்டது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில், அமைச்சரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. அதனால், 'சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை இல்லை' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு,

முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

2014 ல் நியமனம் செய்யப்பட்ட கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழில் நிரந்தர பதிவு எண்ணுடன் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்
தயாரிப்பதை தடுக்கும் வகையில், பார்கோடு குறியீட்டுடன் நிரந்தர பதிவு எண் கொண்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும், என கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்போது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2015ல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் பச்சை நிறத்தில் இருந்தன. தற்போது சிவப்பு நிற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதே போல் பதிவு எண், வரிசை எண் மாற்றப்பட்டு நிரந்தர பதிவு எண் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர பதிவு எண் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும் இடம்பெறும்.
அதே போல் இந்த மதிப்பெண் சான்றிதழில் இரண்டு வகையான பார்கோடுகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பிரிவினருக்கு பச்சை நிறத்தினாலான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சலுகைகள் பெற வசதியாக சான்றிதழில் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பிரிவினர் என, குறிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் ஓய்வூதியம் : நிதியமைச்சர் உறுதி

'அரசு ஊழியர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து, குழு அமைத்து ஆலோசிக்கப்படுகிறது,'' என, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - ஐ.பெரியசாமி: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் பன்னீர்செல்வம்: கடந்த, 2003 ஏப்ரல், 1ம் தேதி முதல், அரசு பணியில் சேர்ந்த, 4.41 லட்சம் ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில், அரசு ஊழியர்கள் பங்களிப்போடு, அரசின் பங்குத் தொகையும் சேர்ந்து அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை மாற்றி, ஏற்கனவே அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களுக்கு, எந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது என்பது குறித்து, அரசு முடிவெடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது

10 ஆண்டு பழமையான பிளஸ் +2 'சிலபஸ்' : புதிய பாடத்திட்டம் எப்போது வரும்?

பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகள் பழமையாகி விட்ட நிலையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், ஒவ்வொரு பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கல்வியின் தேவை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். இப்படி உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள், அடுத்த ஐந்தாண்டுகள் வரை அமலில் இருக்கும். ஆனால், கடந்த, 20 ஆண்டுகளாக, இதுபோன்ற தொலைநோக்கு பார்வை, பள்ளிக்கல்வித் துறையில் குறைந்து விட்டது. மாறாக, கடந்த, 10 ஆண்டுகளாக, பள்ளிக் கல்வியில் என்ன இலவசத்தை புகுத்தலாம் என, அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கு ஆலோசனை கொடுப்பதால், மாணவர்களுக்கான பாடத்திட்டம் பற்றி, அதிகாரிகளால் முழு கவனம் செலுத்த முடியவில்லை. தற்போதைய பாடத்திட்டம், 2007ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அதுவும், 2005ம் ஆண்டிலேயே தயார் செய்யப்பட்டதால், அதன் ஆயுட்காலம், 10 ஆண்டுகளை தாண்டி விட்டது. இந்நிலையில், பாடத்திட்டத்தை மாற்ற, 2012ல், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகபூஷனராவ் தலைமையில் கமிட்டி அமைத்து, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த பாடத்திட்டத்தின் மீது, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, இறுதி வடிவம் அளிக்கப்பட்டது. பின், 2013ம் ஆண்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மூன்றாண்டுகளை தாண்டும் நிலையில், புதிய பாடத்திட்டத்துக்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளை தாண்டி விட்டதால், அதை கிடப்பில் போட பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில், முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசித்து, மீண்டும் புதிய பாடத்திட்டம் தயாரிக்க, கமிட்டி அமைக்கப்படலாம் என தெரிகிறது.

நோட்டீஸ் வழங்காமல் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கல்வித்துறை தடை

நோட்டீஸ் வழங்காமல் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கல்வித்துறை தடை விதித்துள்ளது. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஊதியம் கணக்கிடும் போது, சிலருக்கு தவறுதலாக கூடுதல் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த குளறுபடி தணிக்கையின் போது கண்டறியப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக வழங்கிய தொகையை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தர விடப்படுகிறது. திடீரென ஊதியத்தை பிடித்தம் செய்ய துறை அலுவலர் உத்தரவிடுவதால், சிலர் நீதி மன்றத்தில் தடையாணை பெறுகின்றனர். இதனால் கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதையடுத்து 'தணிக்கை விபரம் குறித்து சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கிய பின்பே, ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும்,' என நிதித்துறை அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி ஆசிரியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை நோட்டீஸ் வழங்காமல் பிடித்தம் செய்யக்கூடாது என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

"ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நடப்பாண்டில் உடனடியாக எவ்வித ஒளிவுமறைவின்றி நடத்த வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் மற்றும் மூத்தோர், இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஆசிரியர் குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்ட காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும்- இணை இயக்குனர்

கடலுார்: அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கடமைக்கு அல்லாமல் ஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை மேற்கொண்டால் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும் என கல்வித்துறை இணை இயக்குனர் பேசினார்.
கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 30ம் இடமும், 10ம் வகுப்பில் 29ம் இடம் பெற்றது. மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இணை இயக்குனர் (தொழில் கல்வி) பாஸ்கர சேதுபதி, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை குறித்து, தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுப்பணி ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

சேலம்: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே ஜூன் 20-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும்.
மேலும் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு பதிவுப்பணி ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.
பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.
மேலும்  www.tnvelaivaaippu.gov.in  என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

ராமநாதபுரம்,: மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதுகுறித்த பட்டியல் அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனரகம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இணை இயக்குனர்(தொழிற்கல்வி) சார்பில் அனுப்பப்பட்டுள்ள அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஏற்கனவே மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள கணினி ஆசிரியர் காலி பணியிடங்கள், புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தேவைப்படும் பணியிடம் குறித்தும், விரைவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம், சில பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு கூடுதலாக துவக்கும் நிலை இருப்பின் கூடுதல் ஆசிரியர் தேவை விபரம் குறித்தும் பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும்.
இந்த பணிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விரைந்து முடித்து பட்டியல் தர வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது. இதனால், அரசுப்பள்ளிகளில் வேலை கேட்டு காத்திருந்த பட்டதாரி கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூன் 23ம் தேதி முதல், வகுப்புகளை துவக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1ல் தகுந்த பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர். 

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூன் 23ம் தேதி முதல், வகுப்புகளை துவக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.அதேநாளில், பிளஸ் 1 பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவும், பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. 

கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்க கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். 


அங்கு பணியாற்றும், இணை இயக்குனர் செல்வராஜ், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் வர்மா, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20 முதல் மார்க்‌ஷீட்

விரு து ந கர், ஜூன் 17-
அரசு தேர் வு கள் இயக் கு நர் வசுந் த ரா தேவி அறிக்கை:
தமி ழ கத் தில் 8,33,682 மாண வர் கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு தி னர். தேர்வு முடி வு கள் வெளி யா னதை தொடர்ந்து மாண வர் க ளுக்கு மே 21 முதல் பள் ளி கள் மூலம் தற் கா லிக மதிப் பெண் சான் றி தழ் வழங் கப் பட் டது. மறு கூட் டல், மறு ம திப் பீடு மற் றும் விடைத் தாள் நகல் கோரி 1,00,751 பேர் விண் ணப் பித் த னர். இவற் றில் மறு கூட் ட லுக்கு 3,344 பேரும், மறு ம திப் பீ டுக்கு 3,422 பேரும் விண் ணப் பித் த னர்.
இவர் க ளில் மதிப் பெண் மாற் றம் உள்ள தேர் வர் க ளது பதி வெண் கள் மட் டும் scan.tndge.in என்ற இணை ய த ளத் தில் இன்று காலை 11 மணிக்கு வெளி யி டப் பட் டது. பட் டி ய லில் பதி வெண் கள் இல் லா த வர் க ளின் விடைத் தாள் க ளில் எவ் வித மதிப் பெண் மாற் ற மும் இல்லை என அறிந்து கொள் ள லாம்.
தேர் வெ ழு திய அனைத்து மாணவ, மாண வி க ளுக் கும் அசல் மதிப் பெண் சான் றி தழ் ஜூன் 20ம் தேதி காலை 10 மணி முதல் பள் ளி க ளின் தலை மை யா சி ரி யர் கள் மூலம் விநி யோ கம் செய் யப் ப டும். மதிப் பெண் மாற் றம் உள்ள தேர் வர் க ளுக் கும் அன்றே சான் றி தழ் வழங் கப் ப டும். தனித் தேர் வர் கள், தங் க ளது மதிப் பெண் சான் றி தழ் களை தேர் வெ ழு திய தேர்வு மையத் தி லேயே பெற் றுக் கொள் ள லாம்.

அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி, ஞாயிறு சிறப்பு பயிற்சி


திண் டுக் கல், ஜூன் 16:
அரசு பள் ளி க ளில் படிக் கும் 10ம் வகுப்பு மாண வர் க ளுக்கு சனி மற் றும் ஞாயிற் றுக் கி ழ மை க ளில் சிறப்பு பயிற்சி அளிக் கப் ப ட வுள் ளது. இத் திட் டம் நாளை மறு நாள் (ஜூன் 18) துவங் கு கி றது.
அர சுப் பள் ளி க ளில் தேர்ச்சி சத வீ தத்தை அதி க ரிக் க வும், சாதனை மாண வர் களை உரு வாக் க வும் பல் வேறு சிறப்பு பயிற் சி கள் வழங் கப் பட்டு வரு கின் றன. இதற் காக சிறப்பு வகுப் பு கள் நடத் தப் பட்டு வரு கின் றன. இருப் பி னும் பொதுத் தேர் வு க ளில் தனி யார் பள்ளி மாண வர் களே அதிக மதிப் பெண் களை பெறு கின் ற னர்.
அரசு பள் ளி க ளின் இந்த நிலையை மாற்ற, அனை வ ருக் கும் இடை நிலை கல் வித் திட் டம் சார் பில் நடப் பாண் டில் மாண வர் க ளுக்கு சிறப்பு பயிற்சி வழங் கப் பட உள் ளது. இதன் படி ஒவ் வொரு அர சுப் பள் ளி யி லும் 10ம் வகுப் புத் தேர் வில் முதல் 3 இடங் களை பெறும் மாணவ, மாண வி யர் இத் திட் டத் தின் கீழ் கொண்டு வரப் பட உள் ள னர். அவர் களை திண் டுக் கல் மாவட் டத் தின் 4 மையங் க ளில் ஒருங் கி ணைத்து, அவர் க ளுக்கு ஒவ் வொரு சனி, ஞாயி றும் சிறப்பு பயிற்சி அளிக்க திட் ட மி டப் பட் டுள் ளது என்று முதன்மை கல்வி அலு வ லர் சுபா ஷினி தெரி வித் துள் ளார்.
உதவி மாவட்ட திட்ட ஒருங் கி ணைப் பா ளர் சேசு ராஜா பயஸ் கூறு கை யில், ‘‘திண் டுக் கல் மாவட் டத் தில் உள்ள 160 பள் ளி க ளி லும் தலா 3 மாணவ, மாண வி கள் தேர்வு செய் யப் பட உள் ள னர். அவர் க ளுக்கு சிறப்பு பயிற்சி அளிக் கப் பட உள் ளது. ஒவ் வொரு மையத் தி லும் 50 பேருக்கு பயிற்சி அளிக் கப் ப டும். தமி ழ க மெங் கும் இதற் கான பயிற்சி மையங் கள் துவங் கப் பட உள் ளன.
இந்த மையங் க ளில் சிறப்பு ஆசி ரி யர் களை கொண்டு மாண வர் க ளுக்கு பயிற்சி அளிக் கப் ப டும். இதற் காக ஆசி ரி யர் க ளுக்கு உழைப் பூ தி யம், மாண வர் க ளுக்கு பய ணப் ப டி யும் வழங் கப் ப டும். மேலும் மாண வர் க ளுக்கு வினா வங்கி இல வ ச மாக வழங் கப் ப டு வ து டன், முழுப் பா டத் திற் கும் இரண்டு தேர்வு நடத் தப் ப டும். ஜூன் 18 (நாளை மறு நாள்) முதல் இத் திட் டம் துவங்க உள் ளது,’’ என் றார்.

பள்ளி சான்றிதழில் சாதி, மதம் கட்டாயமில்லை


சென்னை, ஜூன் 16:
பள் ளி க ளில் சாதி, மதம் பெயரை கேட்டு மாண வர் களை கட் டா யப் ப டுத்த கூடாது. மேலும், ஏற் க னவே உள்ள அர சா ணையை உட ன டி யாக அமல் ப டுத் தும் வகை யில் அது குறித்த சுற் ற றிக் கையை அனைத்து பள் ளி க ளுக் கும் அனுப்ப வேண் டும் என்று நீதி ப தி கள் அர சுக்கு உத் த ர விட் ட னர்.
சென்னை உயர் நீதி மன் றத் தில், வில் லி வாக் கத்ைத சேர்ந்த பால கி ருஷ் ணன் என் ப வர் தாக் கல் செய்த மனு வில் கூறி யி ருப் ப தா வது: தமி ழக கல் வித் துறை கடந்த 1973ம் ஆண்டு ஒன்று 2000ம் ஆண்டு மற்ெ றான்று என இரண்டு அர சா ணை களை வெளி யிட் டது. இதில் மாண வர் களை கல்வி நிறு வ னங் க ளில் சேர்க் கும் போது சாதி, மதத்தை கட் டா யப் ப டுத் தக் கூ டாது. பள் ளி க ளில் மாற்று சான் றி தழ். பள்ளி சான் றி தழ் வழங் கும் போது சாதி, மதம் பெயரை விருப் ப பட் ட வர் கள் கொடுக் க லாம். சாதி, மதம் என் பதை குறிப் பிட வேண் டும் என்று பள்ளி நிர் வா கம் மாண வர் களை கட் டா யப் ப டுத்த கூடாது என்று அர சா ணை யில் ெதளி வாக கூறப் பட் டுள் ளது.
இதை தமி ழ கத் தில் உள்ள பள்ளி நிர் வா கங் கள் அமல் ப டுத் து வது இல்லை. எனவே இந்த அர சா ணையை அமல் ப டுத்த பள் ளி க ளுக்கு சுற் ற றிக்கை அனுப்ப, அர சுக்கு உயர் நீதி மன் றம் உத் த ர விட வேண் டும். பெற் றோர் க ளி டம் சரி யான விழிப் பு ணர்வு இது கு றித்து ஏற் ப டுத் த வும் அர சுக்கு உத் த ர விட வேண் டும்.
இவ் வாறு அவர் வழக் கில் கூறி யி ருந் தார்.
இந்த வழக்கை தலைைம நீதி பதி எஸ்கே. கவுல், நீதி பதி மகா தே வன் ஆகி யோர் விசா ரித் த னர். அப் போது அரசு தரப் பில் ஆஜ ரான வக் கீல், ‘அர சா ணையை அமல் ப டுத்த எல்லா பள் ளி க ளுக் கும் உத் த ர வி டு கி றோம்.” என் றார். இதை கேட்ட நீதி ப தி கள், உட ன டி யாக அரசு அனைத்து பள் ளி க ளுக் கும் புதிய சுற் ற றிக்கை அனுப்ப வேண் டும். அதில் அர சா ணையை அனைத்து பள் ளி க ளும் அமல் ப டுத் த வேண் டும் என்று குறிப் பிட வேண் டும்.” என்று உத் த ர விட் ட னர்.

பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு முடிவு


சென்னை, ஜூன் 17:
மறு கூட் டல் செய் த வர் க ளுக்கு இன்று இணைய தளத் தில் முடி வு கள் வெளி யி டப் ப டு கி றது என்று தேர் வுத் துறை அறி வித் துள் ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர் வில் மொத் தம் 8 லட் சத்து 33 ஆயி ரத்து 682 பேர் தேர்வு எழு தி னர்.
அதில் தேர்வு முடி வுக்கு பிறகு மறு கூட் டல் மற் றும் விடைத் தாள் நகல் கேட்டு 1 லட் சத்து 751 பேர் விண் ணப் பித் தி ருந் த னர். இதே போல, மறு கூட் டல் செய்ய 3,344 பேர் விண் ணப் பித் தி ருந் த னர். மறு மதிப் பீடு செய்ய 3,422 பேர் விண் ணப் பித் த னர்.
மேற் கண்ட மாண வர் க ளில் மறு கூட் டல் மற் றும் மறு மதிப் பீடு செய் யப் பட் ட வர் க ளில் மதிப் பெண் மாற் றம் உள் ள வர் கள் மதிப் பெண் கள் மட் டும் scan.tndge.in என்ற இணைய தளத் தில் இன்று காலை 11 மணிக்கு வெளி யி டப் ப டும். இந்த பட் டி ய லில் இடம் பெறாத மாண வர் க ளின் விடைத் தாள் க ளில் எந்த மதிப் பெண் மாற் ற மும் இல்லை.
மதிப் பெண் மாற் றம் உள் ள வர் கள் 20ம் தேதி காலை 10 மணிக்கு தாங் கள் படித்த தேர்வு மையங் க ளில் அசல் மதிப் பெண் சான் று களை பெற் றுக் கொள் ள லாம்.

கலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்

ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு தாமதமாகும் நிலையில், பல இடங்களில் இடமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது.
ஆசிரியர்களின் இடமாறுதல், பணி உயர்வு உத்தரவுகள், முதன்மைக் கல்வி அலுவலகங்களின் வழியே, 'ஆன்லைனில்' வழங்கப்படும். முதலில், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டது; இப்போது, அதிகாரிகள், அமைச்சர்கள், ஆசிரியர் சங்கங்களின் சிபாரிசு அடிப்படையிலான இடமாறுதலாக மாறி 
விட்டது.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், கலந்தாய்வு எப்போது நடைபெறும் என, பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கே இன்னும் தகவல் இல்லை. துறை செயலர் சவீதா தான் முடிவு செய்வார் என காத்திருக்கின்றனர்.இதற்கிடையில், கலந்தாய்வு தேதி அறிவிக்கும் முன், பல முக்கியமான இடங்கள் குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, 
திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கு, சிபாரிசு அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
எனவே, காலியிடங்கள் மறைக்கப்படவோ, விதிகளை மீறி நிரப்பப்படவோ, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், விரைவில் ஆசிரியர் கலந்தாய்வை அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல்-மாவட்ட வாரியமாக

தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியலை மாவட்ட வாரியமாக இந்த இணைய தளத்தில் பார்க்கலாம். உங்கள் வசதிக்காக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதள முகவரி இதோ: tnmatricschools.com/

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமல்

புதுடெல்லி - மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 6 முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதில் கடைசியாக வழங்கப்பட்ட 6 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அதிகபட்ச சம்பள உயர்வை மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அளித்தன. இந்நிலையில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி கட்டத்தில் 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் தனது பரிந்துரைகளை கடந்த ஆண்டு மத்திய அரசிடம் ஒப்படைத்தது. அதன்படி இந்த பரிந்துரைகள் 2015 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கமிஷன் பரிந்துரைகளை ஆய்வு செய்ய கேபினட் செயலர் பி.கே.சின்கா தலைமையில் செயலர்கள் குழு கடந்த ஜனவரி மாதம் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி நேற்று கூட 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் குறித்து இறுதி முடிவு எடுத்தது.
இதைதொடர்ந்து செயலர் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். இந்த அரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். ஆகஸ்ட் 1 முதல் சம்பள உயர்வு அமல்படுத்தப்படும். ஜனவரி 2016 முதல் ஆகஸ்ட் வரையிலான நிலுவை தொகை ஒரே தவணையில் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் ஆகவும், அதிக பட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரமாகவும் நிர்ணயித்து செயலர்கள் குழு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மாவட்ட வாரியாகக் கணக்கெடுப்பு: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்

பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 அரசு தேர்வுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் குறித்து மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.
தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 10,11,919 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 9,47,335 பேர் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் 8,33,682 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7,61,725 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தற்போது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி வாரியாகவும், பாடம் வாரியாகவும் மாவட்ட கல்வித் துறை கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள், பாடங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. இந்த அறிக்கை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணம் குறித்து குறிப்பிட்ட பள்ளித் தலைமை ஆசிரியர், பாட ஆசிரி யரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், தேர்ச்சி சதவீதம் மிகக் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களின் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது உட் பட பல்வேறு கடுமையான நடவடிக் கைகளை எடுக்கவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்; மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் 40 லட்சம் பேர் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ் மாநில பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காலவரையற்ற வேலைநிறுத்தம்
7-வது சம்பள கமிஷன் தனது பரிந்துரையை 2015 நவம்பர் 19-ந் தேதியே மத்திய அரசிடம் வழங்கிவிட்டது. 6 மாத காலஅவகாசம் இருந்தும் அதை ஒட்டிய கோரிக்கைகள் மீதான பிரச்சினைகளை ஊழியர் தரப்பிடம் மத்திய அரசு பேசித்தீர்க்க முன்வரவில்லை. 

2016-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதியன்று டெல்லியில் கூடிய தேசிய போராட்டக்குழு, 2016-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதியன்று வேலைநிறுத்த அறிவிப்பை கேபினட் செயலாளரிடம் வழங்குவது என்றும், ஜூலை 11-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவது என்றும் முடிவெடுத்துள்ளது.

40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்
அதன்படி ரெயில்வே பாதுகாப்பு, தபால், ஏ.ஜி, வருமானவரி, கலால், சுங்கம், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கு பெறுவார்கள்.மத்தியஅரசு செயலாளர்களோடு நடந்த பேச்சுவார்த்தையில் அடிப்படை கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து சற்று உயர்த்துவோம். அதே நேரத்தில் இந்த உயர்வை அனைவருக்கும் கொடுக்க முடியாது என்பதை ஊழியர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

அரியலுார் அருகே, சாலைக்குறிச்சி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 80 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியையான புனிதவதி, நேற்று காலை, 10:00 மணியளவில், மாணவ, மாணவியரை பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தி, குப்பையை அள்ளும்படி சொன்னார். மேலும், பள்ளியில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும்படியும் கூறியுள்ளார். இத்தகவலறிந்த பெற்றோர், தலைமை ஆசிரியை கண்டித்து, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர், பெற்றோரிடம் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து விசாரித்ததில், மாணவர்களை, தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது, உண்மையென தெரியவந்தது. இதையடுத்து, தலைமை ஆசிரியை புனிதவதியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.

கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி; குவியும் வாழ்த்துகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுதல், இடமாறுதல், பென்ஷன் போன்றவற்றுக்கு அதிகாரிகளை கவனித்தே உத்தரவு பெறும் நிலையில், எதையும் எதிர்பார்க்காமல் உத்தரவிட்ட அதிகாரிக்கு, வாட்ஸ் ஆப்பில் வாழ்த்துகள் குவிகின்றன.
தமிழகத்தில் தொடக்கப் பள்ளிபள்ளிக்கல்விஅனைவருக்கும் கல்வி இயக்கம்எஸ்.எஸ்.ஏ.எனப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமான ஆர்.எம்.எஸ்.ஏ.எனபல துறைகளின் கீழ்ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 
இடம் மாறுதல்விடுப்புகளை சரிசெய்தல்பாஸ்போர்ட் வாங்க அனுமதிபி.எப்.மற்றும் பதவி உயர்வு பெறுவது எனஅனைத்து வகையான பணிகளுக்கும்கல்வி அலுவலக பணியாளர்களையும்மேலதிகாரிகளையும், &'கவனிக்க&' வேண்டியது கட்டாயம். இதில் சிலஅதிகாரிகளும்பணியாளர்களும் மட்டும் விதிவிலக்கு.
இந்த வகையில்தற்போது,10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவுகளை, 5ம் வகுப்பு வரைதொடக்கக் கல்வி அதிகாரியானஏ.இ.இ.ஓ.பிறப்பிக்கிறார்; 10ம் வகுப்பு வரை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ.,வும்அதற்கு மேல்சி.இ.ஓ.,வும் பிறப்பிக்கின்றனர்.
இந்தாண்டு இந்த தேர்வு நிலை அந்தஸ்தை பெறஆசிரியர்கள் தங்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தலைமை ஆசிரியர்கள் மூலமும் தேவையானவற்றை கவனித்துவருகின்றனர்.
ஆனால்மதுரை மாவட்டஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர்,நேற்று முன்தினம்அலுவலகத்துக்கு மனுக்கள் கொண்டு சென்ற, 50 ஆசிரியர்களுக்கு,உடனடியாக ஆவணங்களை ஆய்வு செய்து தேர்வு நிலை அந்தஸ்து சான்றிதழ் வழங்கிஉள்ளார். 
இதனால்திக்குமுக்காடி போன ஆசிரியர்கள்வந்த காரியம் இவ்வளவு எளிதில் முடிந்துவிட்டதே என,ஆச்சர்யமடைந்துஅந்த அதிகாரிக்கு பரிசளிக்க நினைத்துள்ளனர். அதையும் அவர் ஏற்றுக் கொள்ளாமல்,பள்ளிக்கு சென்று சிறப்பாக கல்வி பணியாற்றுங்கள் எனஅறிவுரை கூறி அனுப்பியுள்ளார். 
இந்த தகவல்ஆசிரியர்களின் மொபைல் போன்களில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் உலா வந்து அனைவரின் பாராட்டையும் பெற்ற வண்ணம் உள்ளது.

அரசியல்வாதிகளின் குறுக்கீட்டால் மனநிறைவுடன் பணியாற்ற முடியவில்லை: பள்ளி தலைமையாசிரியர் வேதனை

அரசியல்வாதிகளின் குறுக் கீட்டால் மனநிறைவுடன் பணியாற்ற முடியவில்லை என உளுந்தூர்பேட்டை அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியர் கலைச்செல்வன் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் விழா பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு கலந்து கொண்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்று பேசும்போது, ''பள்ளியின் வளர்ச்சிக்காக அனைத்து ஆசிரியர்களும் கடுமையாக உழைத்து பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தி வருகிறோம். அதனால் இந்த ஆண்டு பள்ளியின் தேர்ச்சி விகிதம் 90 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
ஆனால் இந்த பள்ளியில் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் எங்களால் மன நிறைவுடன் பணியாற்ற முடியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்திருந்த நிலையில், ஆசிரியர் என்ற முறையில் நான் அந்த மாணவிக்கு அறிவுரை கூறினேன். அதனால் அந்த மாணவியின் திருமணம் நின்றது. இதனால் அந்த மாணவியின் உறவினர்களான அரசியல்வாதிகள், ஆசிரியர்களை அவமானப்படுத்தினர். இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.''என்று மிக வருத்தத்துடன் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘பள்ளிகளில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருந்தால் தொடர்ந்து இந்த பள்ளி 100 சதவிகித தேர்ச்சியை எட்டும்'' என்றார்.
அதன்பின் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட நூல்களை வழங்கி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை வாழ்த்தி பேசினார். தலைமையாசிரியர் ஆதங்கப்பட்டு பேசியது தொடர்பாக, ஒரு அரசியல்வாதி என்ற முறையில் குமரகுரு எம்எல்ஏ விளக்கம் தருவார் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் விலையில்லா பாடநூல்களை வழங்கி விட்டு விறுவிறுவென கிளம்பி விட்டார்.

விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு தேர்வுத்துறை வெளியிட கோரிக்கை

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., போல், விடை குறிப்பு மற்றும் திருத்த முறையை வெளியிட வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற அமைப்பான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களால் முன்னுரிமை கொடுத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 15 லட்சம் பேர், 10ம் வகுப்பு; 13 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெறுகின்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2வில், 8 லட்சம் பேர்; 10ம் வகுப்பில் 10 லட்சம் பேர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில் பொதுத் தேர்வு திருத்த முறைகளில் பல சர்ச்சைகள் ஏற்படுவது உண்டு. சரியான விடை எழுதிய பலருக்கு, உரிய மதிப்பெண் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுகிறது.
* பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் முறை என்ன?
* அதற்கான தேர்வுத்துறையின் விதிகள் என்ன?
* விடைக்குறிப்பு சரியாக தயாரிக்கப்படுகிறதா? 
* அதில் உள்ளது போல், மதிப்பெண் வழங்கப்படுகிறதா போன்ற பல கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைப்பதில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமல், தமிழக அரசு தேர்வுத்துறையின் செயல்பாடு உள்ளதாக, பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.
எனவே, சி.பி.எஸ்.இ., போல், விடைக்குறிப்பு, மதிப்பெண் முறை மற்றும் விடைத் திருத்த முறை குறித்த விதிமுறைகளை வெளியிட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு போன்ற விவரங்களை, சி.பி.எஸ்.இ., தரப்பில், பொதுவான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பார்த்து மாணவரும், பெற்றோரும் தங்கள் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டுள்ளதா என பார்த்து, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
தமிழகத்தில் மறு மதிப்பீட்டுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், விடைக்குறிப்பு மற்றும் திருத்த முறை என்னவென்றே தெரியாத நிலையில், மீண்டும் அதிக கட்டணம் செலுத்தி, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, தேர்வுத்துறைக்கு
கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலுக்குள் மகப்பேறு விடுப்பு உயர்வு

உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக அறிவிக்க, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள்,
அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள், தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, தற்போது, ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், 'மகப்பேறு கால விடுப்பு, ஒன்பது மாதமாக உயர்த்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க., அரசு, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை, ஒன்பது மாதங்களாக உயர்த்தி அறிவிக்க உள்ளது. இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள், கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டனர். முடிவில், பெண்களின் ஓட்டுகளை கவர, உள்ளாட்சி தேர்தலுக்கு முன், இதை அமல்படுத்தும்படி, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை

சிவகங்கை, :தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர்.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது. இத்தேர்வை எழுத 7 ம் வகுப்பில் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை வழங்குவதற்காக மாணவர்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு எண் பெறப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் உதவித்தொகை கிடைக்காதோர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலையும், அவர்களது சேமிப்பு கணக்கு எண்ணையும் அனுப்பி விடுவோம். அவர்கள் நேரடியாக மாணவர்கள் கணக்கில் உதவித்தொகைக்குரிய பணத்தை செலுத்திவிடுவர். உதவித்தொகை வரவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என்றார்.

மாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெளியாகும்

'மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கை வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெளிவு
படுத்தியுள்ளது. இந்தியாவில், பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்து முடிவு செய்யும் புதிய கல்வி கொள்கை, கடைசியாக, 1986ல், அப்போதைய பிரதமர் ராஜிவ் வெளியிட்டார். அதன் பின் வந்த அரசுகள், அதில் மாற்றங்களை மட்டுமே செய்துள்ளன. 
கல்வித்துறை அசுர வளர்ச்சி அடைந்த போதிலும், அதன் தரம் குறித்த விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இதையடுத்து, புதிய கல்வி கொள்கையை உருவாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதற்காக, முன்னாள், மத்திய அமைச்சரவை செயலர், டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதில், என்.சி.இ.ஆர்.டி., தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். இந்த கமிட்டி தனது 
அறிக்கையை, மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. எனினும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை பெறப்பட்டது. 'ஆன்லைன்' மூலமாகவும், நேரடியாகவும் பரிந்துரைகள் பெறப்பட்டன. கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என, பல தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது. 
இந்த கல்விக் கொள்கை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை வெளியிடும் முன், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து பரிந்துரைகளை பெறுவதாக, மாநில அரசுகளிடம் கூறியுள்ளோம்; அதன்படியே செயல்படுவோம். மாநில அரசுகளின் பரிந்துரைகள் பெற்ற பின்பே இது வெளியிடப்படும்.

நூறு சதவீதம் தேர்ச்சிக்காக உழைத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தங்க மோதிரங்கள் பரிசு: முதல் வகுப்பில் சேருவோருக்கு ரூ.10 ஆயிரம் வைப்பு நிதி

அரசுப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சொந்த செலவில் தங்க மோதிரங்களை பரிசாக வழங்கி பாராட்டி வருகிறார் கல்லூரணி ஊராட்சித் தலைவர் மீனாட்சி மோகன்குமார். மேலும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கல்லூ ரணி ஊராட்சித் தலைவர் மீனாட்சி. இவரது கணவர் மோகன்குமார். இவர் முன்னாள் அரசு வழக்கறிஞர். கல்லூரணியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரி யர்களையும் ஊக்குவிக்கும் வகை யில் ஆண்டுதோறும் பரிசு வழங்கி கவுரவிக்கின்றனர்.
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 33 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் மாணவன் சபாபதி 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவன் பார்த் தசாரதி 448 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி சௌந்தர்யா 442 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற் றுள்ளனர். மேலும், 400 மதிப் பெண்களை 8 மாணவர்கள் பெற்று ள்ளனர்.
இவர்களை பாராட்டவும், நூறு சதவீத தேர்ச்சிக்கு உழைத்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் உதயகுமார், ஆசிரியர்கள் பானுமதி (தமிழ்), பிச்சைமணி (ஆங்கிலம்), எட்வின் செல்வராஜ் (கணிதம்), அறிவியல் ரதி ஜுலா பிளாரன்ஸ் (அறிவியல்), ராஜேஸ்வரி (சமூக அறிவியல்). ராம்குமார் (உடற்கல்வி ஆசிரியர்) ஆகிய 7 பேருக்கு தலா அரை பவுன் தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
முதலிடம் பெற்ற மாணவருக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் தங்கப் பதக்கம், இரண்டாமிடம் பெற்ற மாணவருக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பதக்கம், மூன்றாமிடம் பெற்ற மாணவிக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன. 400-க்குமேல் பெற்ற 8 மாணவர்களுக்கு தலா ரூ.1500 மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன.
இது குறித்து `தி இந்து’விடம் ஊராட்சித் தலைவர் மீனாட்சி கூறியதாவது: கிராமப்புற மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பாராட்டி வருகி றோம். அதற்கு காரணமான ஆசிரி யர்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டாக தங்க மோதிரங்கள் பரிசு வழங்கி வருகிறோம். இந்தாண்டு இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகின்றன. அதை மாற்றும் வகையில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளோம். இதை எங்களது சொந்த செலவில் செய்து வருகிறோம் என்றார்.

இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், சாவியை பறித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு

இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், சாவியை பறித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி 
கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான பட்டியலை 'சிடி'யாக தயார் செய்து 10ம் தேதிக்குள் போக்குவரத்து கழக வணிக மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை விட கூடுதல் மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஏற்றி செல்ல அனுமதிக்க கூடாது. வாகனங்களின் மேற்கூரை, பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்ல அனுமதிக்க கூடாது. ரோட்டை கடக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாக சேர்ந்து செல்லக் கூடாது. 
'டிவைடர்' குறுகே தாண்டி செல்ல கூடாது. ரோட்டில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டுமே கடந்து செல்ல வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்து பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவரை அழைத்து தலைமை ஆசிரியர் எச்சரிக்க வேண்டும். அம் மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால், பெற்றோர் முன்னிலையில் எச்சரிக்க வேண்டும். தொடர்ந்து இத் தவறை செய்யும் மாணவரிடம் இருந்து இலவச பஸ் பாஸ் பயண அட்டையை திரும்ப பெற வேண்டும்.
பள்ளி இறை வணக்கத்தின் போது சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வைக்க வேண்டும். 16 முதல் 18 வயது உடைய மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறாமல் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது. 
எச்சரித்தும் மாணவர் வர நேர்ந்தால் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து பெற்றோரை வரவழைத்து எச்சரித்து ஓப்படைக்க வேண்டும். பள்ளிக்கு அலைபேசி கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது, என 
தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்குஜூன் 3, 4ல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, ஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று காலை, 10:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பெறலாம். விடைத்தாள் நகலை பெற்ற பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். 
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, ஜூன், 3, 4ம் தேதிகளில், மாலை 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை, முதன்மை கல்வி அலுவலகத்திலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கிடையாது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி கடந்த மே 31-ம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட இப்பள்ளிகள் கடைபிடிக்கவில்லை. முறையற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாலேயே கும்பகோணம் பள்ளி விபத்தில் இளம் குழந்தைகளை இழந்தோம்.
இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழக அரசு முறையாக கடைபிடிக்கவில்லை. இந்த 746 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் மே 31-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகளை மூட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முன்வரவில்லை. இதனால் இப்பள்ளிகளில் பயிலும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மீண்டும் இதே பள்ளியில் படிப்பைத் தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
2 மாதம் போதிய அவகாசம் இருந்தும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவும், இன்னும் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வருவது அங்கீகாரமற்ற பள்ளிகளுக்கு தமிழக அரசும் ஆதரவாக செயல்படுகிறதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அங்கீகாரமற்ற அந்த 746 பள்ளிகள் குறித்த தகவலை உடனடியாக இணையத்தில் வெளியிட்டு, அங்கு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் நாராயணன் ஆஜராகி தனது கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ‘‘ இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க ஏற்கெனவே ஜூன் 30 வரை தனி நீதிபதி காலஅவகாசம் கொடுத்துள்ளார். எனவே ஜூன் 30 வரை இப்பள்ளிகளுக்கு தற்காலிக காலநீட்டிப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த 746 பள்ளிகளிலும் சுமார் 5 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். எனவே இந்த விஷயத்தில் அவசர கதியில் முடிவெடுத்தால், அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘ஒரு பிரச்சனைக்கு இயந்திர கதியில் தீர்வு காண முடியாது. 5 லட்சம் மாணவர்களின் நலன் தொடர்பான பிரச்சினை இது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு குறைபாடுகளைக் களைய உரிய தேதிக்கு முன்பாகவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.