எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதி களை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது' என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

திருப்பூர்;'.தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவ,- மாணவியர் பள்ளிக்கு வரும்போதும், இடைவேளை நேரம், மதிய உணவு நேரம் மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பிச் செல்லும் போதும், முறையாக கண்காணிக்க ஆசிரியர்களை, சுழற்சி முறையில்
நியமிக்க வேண்டும்.

சத்துணவு தயாரிக்கும் போதும், பரிமாறும் போதும் நேரடி கவனம் செலுத்த வேண்டும். தலைமை ஆசிரியர் சுவைத்து பார்த்த பிறகே, மாணவர்களுக்கு பரிமாற வேண்டும். பள்ளி வேளையில் மாணவ மாணவியர், இயற்கை உபாதை, குடிநீர் மற்றும் தின்பண்டம் வாங்க வெளியே செல்லக்கூடாது. மாணவர்கள் இடையே மோதலை தவிர்க்க, கலந்துரையாட வேண்டும். காலையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வருவதற்கு முன்பே, பள்ளிக்கு வர வேண்டும்; மாலையில் மாணவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற பிறகே, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செல்ல வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது.

பள்ளி நேரத்தில், வெளியாட்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது.பத்திரிகை நிருபர்களை, எக்காரணம் கொண்டும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில், பள்ளி வேலை நேரத்தில் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதியின்றி, பேட்டி கொடுக்கவோ கூடாது.
பாடவேளையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மொபைல் போன் பயன்படுத்த கூடாது.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு

மத்திய அரசு சார்பில், மைசூரில் நடக்கும், பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, பத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள, 20 மொழிக்கும், அந்தந்த மொழி ஆசிரியர்களை தேர்வு செய்து, ஏழு மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.
மைசூரில் உள்ள தென்னிந்திய மொழிக்கல்வி மையத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், தமிழ்மொழிக்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களில், 44 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விருப்பம் உள்ள தமிழாசிரியர்களின் விண்ணப்பங்களை சேகரித்து, இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வரும் ஜூலை, 4ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி, 2017 ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பயணப்படி, அகவிலைப்படி உள்ளிட்டவற்றையும், மண்டல மொழிக்கல்வி மையம் ஏற்றுக்கொள்கிறது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 12-பி 24ம் தேதி வழங்கப்பட உள்ளது.7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் உள்ள 19 லட்சத்து 94 ஆயிரத்து 357 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 2,256 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் அன்று 11 ஆயிரத்து 851 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு நியமிக்கப்படுவதால், அவர்கள் ஓட்டுப்போட வசதியாக தபால் ஓட்டு வழங்கப்படும்.

இந்த தபால் ஓட்டுகள் கடந்த தேர்தலில் உரிய நேரத்தில் வழங்காததால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இந்த தேர்தலில் முன்கூட்டியே தபால் ஓட்டுகள் வழங்கிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

அதனையேற்ற தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட வசதியாக முதல்கட்ட பயிற்சி வகுப்பிலேயே படிவம் 12-பி வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு வரும் 24ம் தேதி, மே மாதம் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் பயிற்சி வகுப்பு நடைபெறும் 24ம் தேதி அனைவருக்கும் படிவம்-12-பி வழங்கப்பட உள்ளது. அதனை அவர்கள் உடனடியாகவோ அல்லது 7ம் தேதி பயிற்சி வகுப்பு முடிவதற்குள்ளோ பூர்த்தி செய்து வழங்கினால், 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.

அதன் படிவங்களை பூர்த்தி செய்து, ஓட்டு சீட்டில் தனது ஓட்டை பதிவு செய்து பயிற்சி வகுப்பு மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கலாம். அல்லது தொகுதி தேர்தல் அலுவலருக்கு தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

4.73 லட்சம் தபால் ஓட்டுகள்

தமிழகத்தில், 4.73 லட்சம் வாக்காளர்கள், தபால் ஓட்டு போட உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் பணியில், 3 லட்சத்து 3 ஆயிரம் அரசு ஊழியர்கள்; ஒரு லட்சம் போலீசார்; 70 ஆயிரம் டிரைவர், வீடியோகிராபர் மற்றும் பிற ஊழியர்கள் என, மொத்தம் 4.73 லட்சம் ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு, மே 5ம் தேதி, தபால் ஓட்டு சீட்டு வழங்கப்படும். அவர்கள், மே 6ம் தேதியில் இருந்து, மே 18ம் தேதி வரை, தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி அலுவலர் அறை முன் வைக்கப்பட்டிருக்கும், ஓட்டுப் பெட்டியில், தபால் ஓட்டுகளைப் போடலாம்.
தபால் மூலமாகவும், தபால் ஓட்டுகளை, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பலாம்

அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வு


           தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஆகியோருக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம், அகவிலைப்படி உயர்த்தப்படும். அதை தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, மாநில அரசுகள் உயர்த்தும்.
இந்த ஆண்டு ஜனவரியில் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை, மத்திய அரசு மார்ச் மாதம், 6 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும், 6 சதவீதம் அகவிலைப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அகவிலைப்படி, 119 சதவீதத்தில் இருந்து, 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு அலுவலர்களுக்கு, 366 முதல், 4,620 ரூபாய் வரை, கூடுதலாக கிடைக்கும். அகவிலைப்படி உயர்வு, ஜனவரி, 1ம் தேதி முதல் கணக்கிட்டு, ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம், 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.

எஸ்.எஸ்.எல்.சி.கணிதம் :சமன்பாட்டை மாணவ- மாணவியர் எழுத முயன்றிருந்தால் 4 மதிப்பெண்

 ஸ்.எஸ்.எல்.சி.கணிதம் வினாத் தாளில் இடம் பெற்றிருந்த 47-ஆவது கேள்விக்கு வரைபடம் வரைந்து அதன் மூலம் சமன்பாடுகண்டுபிடிக்க வேண்டும். இது 10 மதிப்பெண் கேள்வியாகும். இதில், சமன்பாடுக்கான கேள்வியில் எழுத்துப் பிழை இருந்தது.இதையடுத்து, அந்த சமன்பாட்டை மாணவ- மாணவியர் எழுத முயன்றிருந்தால் 4   மதிப்பெண் அளிக்க வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் மாணவ- மாணவியர் வரைபடம் வரைந்திருந்தால் மட்டுமே அதற்கு 6 மதிப்பெண் அளிக்கப்படும் எனவும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு, மொத்தம், 14 மதிப்பெண்கள் போனஸ்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு, மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று துவங்கியது. முதல் நாளில், தலைமை திருத்துனர்கள் மற்றும் துறை அலுவலர்கள் மூலம், மாதிரிக்காக ஒவ்வொரு அறையிலும், தலா, 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டன. நாளை முதல், உதவி விடை திருத்துனர்கள், முழு அளவில் திருத்தும் பணியில் ஈடுபடுவர்.
வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக, வேதியியலில், ஆறு மதிப்பெண்; கணிதத்தில், தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும், ஆறு மதிப்பெண்; இயற்பியலில், தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும், இரண்டு மதிப்பெண், 'போனஸ்' மதிப்பெண்களாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது
மூன்று பாட தேர்வுகளிலும், சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுத முயற்சித்திருந்தால் மட்டுமே, போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்

10ம் வகுப்பு கணித தேர்வில் பிளஸ் 1 பாட கேள்வி 22 மதிப்பெண் சிக்கல்: மாணவர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், பிளஸ் 1 பாட கேள்வி இடம்பெற்றதால், பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று, கணிதத் தேர்வு நடந்தது; வினாத்தாள் எளிதாக இருந்தது. ஆனால், வினாத்தாளில் பல்வேறு பிழைகளும், பாடத்திட்டத்துக்கு வெளியில் உள்ள கேள்விகளும் இடம்பிடித்தன. இந்த வகையில், மொத்தம், 22 மதிப்பெண்களுக்கு, மாணவர்கள் பதிலளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இரண்டு மதிப்பெண்ணில், ஒரு வினா, பிளஸ் 1 பாடத்திட்டத்தில் உள்ளது. ஆனால், 10ம் வகுப்புக்கு தவறாக கேட்கப்பட்டிருந்தது அதேபோல, 10 மதிப்பெண் வினா ஒன்றில், வினாவே
பிழையாக இருந்ததால், அதை புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.
நேற்றைய தேர்வில், 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள் கூட, 80 மதிப்பெண் தான் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிழையான வினா, பாடத்திட்டத்துக்கு வெளியே வந்த வினா உள்ளிட்டவற்றுக்கு, போனஸ் மதிப்பெண் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

புரிந்து கொள்ள முடியவில்லை

இதுகுறித்து, அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலருமான பி.அன்பழகன் கூறியதாவது:
கணிதத் தேர்வில், மொத்தம், 47 வினாக்களில், 10 மதிப்பெண்களுக்கான, 47வது வினாவில், '- 6' என்பதற்கு பதில், '- b' என்ற ஆங்கில எழுத்து இடம் பெற்றதால், வினாவை மாணவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் விட்டு விட்டனர்.
அதேபோல், 34ம் வினாவில், கூட்டுத்தொடரில், 7வது உறுப்பின் என்ற வார்த்தைக்கு பதில், 7வது முறையின் என்று தவறாக இடம்பெற்றுள்ளதால், அந்த வினாவும் மாணவர்களுக்கு புரியவில்லை.
இதேபோல, 44வது கேள்வி, பாடத்திட்டத்திலோ புத்தகத்திலோ இல்லை. 26வது கேள்வியில், 'cos A+B, Sin A+B' ஆகியவற்றை கண்டறிய குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வினா, பிளஸ் 1 பாடத்திலுள்ள வினா. \
எனவே, வினாத்தாளின் குழப்பங்களுக்கு தேர்வுத்துறை பொறுப்பேற்று, போனஸ் மதிப்பெண்ணை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி: மே.9-ல் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் மே.16-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுகள் நடந்த போதே முடிவுற்ற தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தது: விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக, தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 14-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கிவிட்டது. 

தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் விடைத்தாள்களை திருத்தும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 5-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதற்காக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கடைசியாக நடந்த தேர்வுகளான இயற்பியல் மற்றும் வணிகவியல் பாடங்களின் விடைத் தாள்கள் திருத்தும் பணி 6-ம் தேதி முதல் தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

யாருக்கு ஓட்-ட-ளித்தோம் என்பதை காட்டும் கருவியை, 1,400 வாக்-கா-ள-ருக்-கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த முடியாது

யாருக்கு ஓட்-ட-ளித்தோம் என்பதை காட்டும் கருவியை, 1,400 வாக்-கா-ள-ருக்-கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த முடியாது' என, 'பெல்' நிறுவன பொறியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இக்-க-ருவி, 17 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்தவுடன், கருவியின் திரையில் வேட்பாளரின் வரிசை எண், கட்சியின் பெயர், சின்னம் ஆகி-யவை ஏழு வினாடிகள் தெரியும். அடுத்து, 'பீப்' சத்தம் கேட்கும். பின், யாருக்கு ஓட்டளித்தோம் என்ற விவரம் துண்டுச்சீட்டாக பெட்டியில் விழும்.
'இந்த கரு-வியை எல்லா ஓட்டுச் சாவடிகளிலும் பயன்படுத்த இயலாது. 1,350 வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடியில் மட்டுமே பயன்படுத்த முடி-யும்' என, 'பெல்' நிறுவன பொறியாளர்கள் செல்வகுமார், ராஜீவ் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
இந்த கரு-வி-யில் தெர்மல் தொழில்நுட்பத்துடன் கூடிய, 'ரோலிங் பேப்பர்' இணைக்கப்பட்டுள்ளது. இதில், 1,400 துண்டு சீட்டுகள்தான் இருக்கும். இத-னால் 1,200 முதல் 1,350 வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளில் மட்-டுமே இக்கருவியை பயன்படுத்த உள்ளோம். திண்டுக்கல் தொகுதியில் ஆறு ஓட்டுச்சாவடிகளில் இவை பயன்படுத்தப்படாது' என்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 24 மற்றும் மே 7ம் தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள்

தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தலின்போது ஓட்டுச் சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, விரலில் மை வைப்பது உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் விவரங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சேகரிக்கப்பட்டு, தேர்தல் துறை சார்பில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.மேலும், தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளை அவரவர்களின் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதனை பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்கள், பணிக்குச் செல்லும் முன்பாக அவரவர் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டை பதிவு செய்து, அதனுடன் உள்ள உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்திட்டு, அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடுவது வழக்கம்.இந்நிலையில், கடந்த இரண்டு தேர்தல்களில் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கள் காலதமதமாக கிடைத்ததால் அவர்கள் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது. அதில் பெண் ஆசிரியர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லாமல் போனது. இதன் காரணமாகவே கடந்த இரு தேர்தல்களிலும் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது. இந்த தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்திட தீவிர நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்வதை உறுதி செய்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் தொடர்பாக இரண்டு கட்டங்களாக பயிற்சி நடத்தி, மூன்றாம் கட்டமாக எந்த ஓட்டுச் சாவடியில் பணிபுரியப் போகிறோம் என்பதற்கான பணியாணை வழங்குவர்.
இந்த தேர்தலுக்காக வரும் ஏப்ரல் 24 மற்றும் மே 7ம் தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பும், மே 15ம் தேதி பணியாணை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சியின் போதே தபால் ஓட்டுக்களை வழங்கினால், அவரவர் ஓட்டினை பதிவு செய்து நிம்மதியாக பணிக்கு செல்வர். இதற்கு தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.