துறைதேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி ஏப்ரல் 11 என நீடிப்பு செய்யப்பட்டுள்ளது

அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், உயர் பதவிகளுக்கான தேர்வு டிசம்பர் மற்றும் மே மாதம் நடைபெறும். மே மாதம் நடைபெற இருக்கும் துறைதேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி மார்ச் 31 ல் இருந்து ஏப்ரல் 11 என நீடிப்பு செய்யப்பட்டுள்ளது 'மே' மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இணையதளம் , (www.tnpsc.gov.in ) மூலமாக மட்டும் விண்ணபிக்க முடியும்.

புதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி -

தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற மாநில அரசு ஊழியர்கள்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்., 1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


புதிய பென்ஷன் திட்டத்தில் முன்பணம் பெற ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் மார்ச் 21ல் அனுமதி அளித்துள்ளது. பணியில் சேர்ந்து 10 ஆண்டு முடிந்திருந்தால், அவர்களின் பங்குதொகையில் 25 சதவீதம் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம். திருமணம், முதல்முறையாக வீடு வாங்க அல்லது கட்ட, இருதயநோய், சிறுநீரக, புற்றுநோய் உள்ளிட்ட 15 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற முன் பணம் பெறலாம். முன்பணம் பெற (மருத்துவ செலவை தவிர) 5 ஆண்டுகள் இடைவெளி வேண்டும். மொத்தம் 3 முறை மட்டுமே பணம் பெற முடியும் என, தெரிவித்துள்ளது.

ஆனால் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் முன்பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய பென்ஷன் திட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: தமிழக அரசு வசூலித்த பணத்தை செலுத்தாததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய பணம் பெற முடியாமல் தவிக்கின்றனர். தற்போது முன்பணமும் பெற முடியாத நிலை உள்ளது. பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவிலும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இல்லை. இதனால் மனஉளைச்சலில் உள்ளோம்

EXPRESS PAY ORDER :544 உயர்நிலை பள்ளி பணியிடங்களுக்கு மார்ச் 2016 மாதத்திற்கான விரைவு ஊதிய ஆணை

2009-2010 மற்றும் 2011-2012 ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மார்ச் 2016 மாதத்திற்கான விரைவு ஊதிய ஆணை

CLICK HERE 

பத்தாம் வகுப்பு: ஆங்கிலம் 2-ம் தாளில் விடைத்தாள் மாற்றி அளித்ததால் மாணவர்கள் குழப்பம்

அரக்கோணம்: பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் விடைத்தாள்களில் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு தேவைப்பட்ட வெள்ளைதாள்களை வைக்காமல் அனைத்தையும் கோடிட்ட தாள்களாக வைத்திருந்ததால் 5 மதிப்பெண் கேள்விக்கு விடை எழுத முடியாமல் மாணவ மாணவிகள் திணறினர்.
இது குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர்களிடம் கேட்டால் வந்த விடைத்தாள்களை அளிக்க வேண்டியதே எங்கள் பணி என்று தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பிற்கான ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுகள் செவ்வாய்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் மூன்றாம் பிரிவில் 12-வது கேள்விக்கு கீழ்க்கண்ட குறிப்புகளை வைத்து விளம்பரம் ஒன்றை தயாரிக்கவும் என கேள்வி அளிக்கப்பட்டு அதற்குண்டான குறி்ப்புகள் தரப்பட்டிருந்தன. இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் எப்போதும் வெள்ளை விடைத்தாள்களில் தான் எழுதப்படுவது வழக்கமாம். கடந்த வருடம் வரை ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கான விடைத்தாள்களில் கோடிட்ட தாளுடன் ஒரு வெள்ளைத்தாள் இணைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் இவ்வருடம் வெள்ளைத்தாள் இணைக்கபடவே இல்லை. இதனால் மாணவர்கள் அந்த விளம்பரம் அழகாக எழுத வெள்ளைத்தாளை கேட்ட நிலையில் தேர்வு மையங்களில் அது மாணவர்களுக்கு தரப்படவில்லை. இதனால் பல மாணவர்கள் அந்த பதிலை கோடிட்ட தாள்களிலேயே எழுதினர்.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோக தேதி வெளியீடு

சென்னை: 2016-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை செயலாளர் ஆபூர்வா கூறியுள்ளார்.
60 மையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களைப் பெற்று மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின் இந்தத் தகவலை உயர்கல்வித்துறை செயலாளர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு பொறியியல் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமையோடு முடிவடைய உள்ள நிலையில், அவர்கள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை எவ்வித சிரமங்களும் இன்றி பெற சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு பிளஸ் 2 'ரிசல்ட்' தாமதமாகும் அபாயம்

விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் மற்றும் இரண்டு வகை முக்கிய பாடங்களுக்கு தேர்வுகளும் முடிந்துள்ளன. முதல் கட்ட மாக, 8.5 லட்சம் மாணவர்கள் எழுதிய மொழி பாடங்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி துவங்கி உள்ளது.அதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த, தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்கள் ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பவில்லை. எனவே, விடைத்தாள் திருத்தும் பணி முடிய தாமதமாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கு, விரைவில் திருத்தம் மேற்கொள்ள, 'கீ ஆன்சர்' தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் பிற ஆசிரியர்களிடமிருந்தும், 'கீ ஆன்சர்' வாங்க, தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதிலும், பல தனியார்பள்ளிகள் தங்கள் ஆசிரியர்களை அனுப்பவில்லை.

பிளஸ் 2: வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

பிளஸ் 2 வேதியியல் பாட விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்ட்டுள்ளது. கடந்த மார்ச் 14-ம் தேதி பிளஸ் 2 வேதியியல் படிப்புக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாகத் தேர்வு எழுதிய மாணவர்கள், வேதியியல் பாட ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.வேதியியல் தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்க வேண்டும் என்றும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க கல்வியாளர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாளை நடக்கவிருந்து வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு

வேலூர்:அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதில், 6,௦௦௦க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன.

பிளஸ் 2 கணித குழப்பத்திற்கு 13 மதிப்பெண்கள் 'கீ ஆன்சர்' தயாரிப்பு குழுவிடம் வலியுறுத்தல்

பிளஸ் 2 கணிதம் வினாத்தாளில் குழப்ப வினாக்களை கருத்தில்கொண்டு மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் வழங்க 'கீ ஆன்சர்' தயாரிப்பு குழு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்,' என கணித ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு பிளஸ் 2 கணிதம் உட்பட பல பாடங்களிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் 'சென்டம்' பெற்றனர். இதற்கு, 'வினாத்தாள் எளிதாக இருந்ததாகவும், விடைத்தாள் மதிப்பீடு கடுமையாக இல்லை,' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனால் இந்தாண்டு வினாத்தாள் அமைப்பில் பெரும்பாலும் ஒரு மதிப்பெண் பகுதியில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் சிந்தித்தும் அல்லது பாடத்தில் இதுவரை கேட்காத பகுதிகளில் இருந்து வினாக்கள் 'தேடி பிடித்தும்' கேட்கப்பட்டிருந்தன.

10ம் வகுப்பு தேர்வு புதிய அறிவிப்பு

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. ஏப்ரல், 7ல் அறிவியல் தேர்வு நடக்க உள்ளது.இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
அதில், '10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத வரும் மாணவர் அல்லது தனித்தேர்வர் யாராக இருந்தாலும், செய்முறை தேர்வை எழுதியிருக்க வேண்டும். இல்லையெனில், அவர்களை அனுமதிக்க வேண்டாம். 'தியரி' எனப்படும், கருத்தியல் தேர்வு மட்டும், தேர்ச்சிக்கான கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

பிளஸ்-2 கணித தேர்வு சற்று எளிதாக இருந்தது’ மாணவ-மாணவிகள் கருத்து

பிளஸ்-2 கணித தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 கணித தேர்வு

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர். 

நேற்று கணிதம், விலங்கியல், நுண்உயிரியல், ஊட்டச்சத்து-உணவுக்கட்டுபாடு ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. கடந்த 14-ந்தேதி நடைபெற்ற வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததாகவும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருந்தனர். வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது போல, கணித தேர்வும் கடினமாக இருந்து விடுமோ என்ற அச்சத்திலே தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினார்கள்.

ஆனால், தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகளில் முகத்தில் சந்தோஷம் நிலவியது. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கணித தேர்வு சற்று எளிதாக இருந்ததாகவும், விலங்கியல் தேர்வும் எளிதாகவே இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி அணு கூறியதாவது:-

மகிழ்ச்சி

பிளஸ்-2 கணித தேர்வு எளிதாக இருந்தது. பாடத்திட்டத்தை தரவாக பார்த்த மாணவ-மாணவிகள், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும். எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒவ்வொரு கேள்வியையும் நன்கு படித்து பார்த்த பின்பு விடையளிக்க அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி, நான் இந்த தேர்வை எழுதினேன். இந்த தேர்வில் நான் 200-க்கு 200 மதிப்பெண் எடுப்பேன். வேதியியல் தேர்வில் இழந்த மதிப்பெண்ணை இந்த தேர்வு மூலம் சரிகட்டுவேன். கடந்த ஓராண்டாக கடின உழைப்புடன் படித்ததற்கு எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், மற்ற மாணவிகள் கூறும்போது, ‘கணித தேர்வில் நாங்கள் எதிர்பார்த்தது போல் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. சற்று எளிதாகவே இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள்

கீ ஆன்சர்' தயாரிப்பில் மதுரை ஆசிரியர்கள் குழு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்கும் குழுவில் மதுரை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவதற்குள் பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கி விட்டன. மொழிப் பாட தேர்வுகள் முடிந்த பின், விடைத்தாள் திருத்தும் பணிகளும் அடுத்தடுத்து துவங்கின.பத்தாம் வகுப்பில் தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் 'கீ ஆன்சர்' தயாரிப்பில், மதுரை ஆசிரியர் குழு ஏற்கனவே இடம் பெற்றது. தற்போது பிளஸ் 2 தேர்வுகளுக்கான 'கீ ஆன்சர்' தயாரிக்க, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு, மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் மூன்று அல்லது நான்கு மாவட்டங்களில் பாடவாரியாக ஆசிரியர்களை தேர்வு செய்து 'கீ ஆன்சர்' தயாரிக்கப்படும். நான்கு வகையான 'கீ ஆன்சர்'களை ஒப்பிட்டு இறுதி 'கீ ஆன்சர்' முடிவு செய்து, அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்தப்படும். இந்தாண்டு அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்க மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்," என்றார்.

பிளஸ் 2 கணித தேர்வு:புதிய கேள்விகளால் மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 கணித தேர்வில், சில புதிய கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் குழப்பமடைந்தனர்; நீண்ட பதிலளிக்க வேண்டிய கேள்விகளால், நேரமின்றி தவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று கணித தேர்வு நடந்தது.

வினாத்தாளில், ஆறு மதிப்பெண்ணுக்கான கட்டாய கேள்விகளில், 46, 47, 52 மற்றும், 55ம் எண் கேள்விகள், இதுவரை முந்தைய தேர்வில் இடம்பெறாத புதிய கேள்விகளாக இருந்தன
மொத்தமுள்ள, 10 பாடங்களில், 8.6வது பிரிவு அல்லது, 8.5வது பிரிவில் இருந்து, 10 மதிப்பெண்களில், ஒரு கேள்வி எதிர்பார்க்கப்படும். இந்த முறை, 8.5வது பிரிவில் இருந்து மட்டும், ஒரு கேள்வி இடம் பெற்று இருந்தது. அதுவும், 'புளூ பிரின்டில்' கூறியுள்ள படி, புத்தகத்திற்கு வெளியே இருந்து சிந்தித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டதால், மாணவர்கள் சற்று திணறினர்
43வது கேள்வியில், பொருள் மாறாமல், சிந்திக்கும் வகையில் கேள்வியின் வடிவம் மாறியிருந்ததால், மாணவர்கள் தடுமாறினர் ஆறு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில் நீளமாக இருந்ததால், அவற்றை எழுத மாணவர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டு, நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது. நேற்று நடந்த, பிளஸ் 2 புவியியல் தேர்வும், சற்று கடினமாகவே இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

'சென்டம்' குறையும்!வினாத்தாளில் பிழையோ, குழப்பமோ இல்லை. சில கேள்விகள் மாணவர்களை சிந்தித்து எழுத செய்வதாக இருந்தது. இது வரையிலான தேர்வுகளில் இடம் பெறாத புதிய கேள்விகள், இந்த முறை இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் கேள்விகள், எளிமையாகவே இருந்தன. தேர்ச்சி பாதிக்காது; 'சென்டம்' வாங்குவோர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
டி.ராஜ், பி.ஏ.கே., பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர், சென்னை,- நமது நிருபர் -

பிளஸ் 2 விலங்கியல் தேர்வு தேர்ச்சி எளிது.சென்டம்' பெறுவது கடினம்

"பிளஸ் 2 விலங்கியல் தேர்வு எளிதாகவும், அதிக எண்ணிக்கையில் 'சென்டம்' எடுக்க முடியாத வகையில் வினாக்கள் இடம் பெற்றுள்ளன," என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.இத்தேர்வு குறித்து ஆசிரியைகள் மெர்லின் (திருமங்கலம் பி.கே.என்., பள்ளி), ஜீவா (பேரையூர் அரசு பள்ளி) ஆகியோர் கூறியதாவது:ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 30 வினாக்களும் எளிது. மூன்று மதிப்பெண் பகுதியில் 20ல் 15 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் 12 நேரடி வினாக்கள் எளிதில் எழுதுவதாக இருந்தன. மூன்று மட்டும் யோசித்து எழுதுவதாக இருந்தன. இதனால் பலர் 'சென்டம்' பெறுவது கடினமாக இருக்கும். ஐந்து மதிப்பெண் பகுதியில் 56வது வினா கட்டாயம் எழுத வேண்டும். அதுவும் அடிக்கடி கேட்கப்பட்ட 'சுற்றுச்சூழல் அறிவியல்' பாடத்தில் கேட்கப்பட்டன. 10 மதிப்பெண் வினா பகுதியில் எழுத வேண்டிய நான்கு வினாக்களும் எளிதாக இருந்தன. அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களே பெரும்பாலும் இடம் பெற்றன. இத்தேர்வில் மாணவர் தேர்ச்சி அதிகரிக்கும்; ஆனால் 'சென்டம்' பெறுவது கடினமாக இருக்கும், என்றனர்.

தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி:பிளஸ் 2 வேதியியல் தேர்வில் வினாத்தாள் 'லீக்?'

பிளஸ் 2 வேதியியல் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, சில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள், 'லீக்' ஆகியுள்ளது. இதனால், வேதியியலுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று கணித, அறிவியல் பிரிவுக்கு வேதியியல் பாட தேர்வும்; பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு, கணிதப் பதிவியல் தேர்வும் நடந்தது. இதில், வேதியியல் பாட தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில், வினாத்தாள், 'லீக்' ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்:மாணவர்கள் திணறல்

நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறையும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் கருத்து:நிவேதா லட்சுமி (தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, தேனி): வேதியியல் பாடத்தில் 3, 5 மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்தபடி கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வினாக்கள் புத்தகம், 'புளூபிரின்ட்' அடிப்படையில் கேட்கப் பட்டிருந்ததால் பல வினாக்களுக்கு எளிமையாக பதில் அளிக்க முடிந்தது.

ஒரு மதிப்பெண் வினாவில் எண் 70ல் (ஆ) பிரிவில் தொகுதி 11 என்பதற்கு பதிலாக, ரோமன் லெட்டர் வடிவத்திலான இரண்டு என இருந்ததால், பதில் அளிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே இக்கேள்விக்கு பதில் அளிக்க முடியும்.
எம்.லட்சுமி விநேகா (சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி): ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண்களுக்கான கேள்விகள் மிக எளிதாக இருந்தது. 10 மதிப்பெண் கேள்விகளில், சப் -டிவிஷனாக கொடுக்கப்பட்ட இரண்டு கேள்விகளில் ஒரு கேள்வி கடினம். இதுவரை கேட்காத கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. இத் தேர்வில் கடந்த முறை கேட்ட வினாக்கள் எதுவும் கேட்கப்படவில்லை. புத்தகம் முழுவதும் புரிந்து படித்திருந்தால் மட்டுமே, அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. முறைகேடுகளைத் தடுக்க, 7,000 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. காலை, 9:15 மணி முதல், 12:00 மணி வரை தேர்வு நடக்கும். கடந்த ஆண்டு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஏராளமானோர், 'சென்டம்' எடுத்தனர். அதை கட்டுப்படுத்த, இந்த ஆண்டு, பாடங்களின் உள்ளே இருந்து சிக்கலான கேள்விகள் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், உரிய விதிகளின் படி தண்டனை வழங்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், தேர்வு மைய அங்கீகாரம் ரத்து; பள்ளி அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

விடுப்பு விதிகள் :கடிதம் எண் 39623/FR III/2015-1 DT:07.01.2016

பிளஸ் 2 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்ச்சை: பெற்றோர் எரிச்சல்

பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் மதுபானங்கள் குறித்த வினா இடம் பெற்றதால் பெற்றோர் எரிச்சல் அடைந்துள்ளனர்.பிளஸ்2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதில் கேட்கப்பட்டு இருந்த ஒருவினாதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.பகுதி 'ஏ' ல் பிரிவு 'பி'ல் 5வது வினா, “முதியவர் பெஹ்ரமான், இலையை வரைந்து முடிக்கும் வரை எவ்வகை மதுவை அதிகம் குடித்தார்? என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு விடைகளாக 'ஒயின், வோட்கா, பீர், ஜின்' என மதுவகைகள் இடம்பெற்று இருந்தன.

இதனால் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வினா மாணவர்களுக்கு மதுவின் வகைகளை அறிமுகப்படுத்துவது போல இருப்பதாக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கருதுகின்றனர். மதுவிலக்கை அமல்
படுத்த பலஅமைப்புகளும் போராடி வரும் நிலையில், பள்ளி மாணவர்களிடம், பொதுத் தேர்வில் இதுபோன்ற வினா கேட்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பி
உள்ளது.
வெளிநாட்டு கதையம்சத்தையொட்டி வினா எழுப்பப்பட்டு இருந்தாலும் இவ்வினாவையே தவிர்த்து இருக்கலாம். அதை
விடுத்து நேரடியாக அதன் வகைகளை எடுத்துக் கூறி, விடைபெறும் வகையில் வினாத்தாளை அமைத்திருப்பது சரியல்ல என சிலஆசிரியர்களும் பெற்றோரும் கருத்து தெரிவித்தனர்.
ஆசிரியர் முருகேசன் (பாரத் டுட்டோரியல், வத்தலக்குண்டு) கூறியதாவது: மாணவர்களிடையே மதுப்பழக்கம் தொற்றி வரும் நிலை உள்ளதால் கேள்வித் தாள் தயாரித்தவர்கள் இதை தவிர்த்திருக்கலாம். இதே பாடத்தில் வேறு நல்ல கேள்விகள் உள்ளன.

மாணவனுக்கு தெரியாத விபரங்களை ஆசிரியர்களே :விளக்கமாக சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். எதிர்காலத்தில் இந்த தவறுகள் நடக்காதவாறு கேள்வித்தாள் தயாரிக்க வேண்டும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை பார்வையிட அண்ணா பல்கலைக்கு அனுமதி

பிளஸ் 2 தேர்வு முறையாக நடத்தப்படுகிறதா; மாணவர்கள் பாடங்களை புரிந்து எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் மற்றும் முதல் மொழி பாட தேர்வில், இரண்டு தாள்களுக்கும், ஆங்கில பாடத்தில் இரண்டு தாள்களுக்கும் தேர்வு முடிந்துள்ளது. முக்கிய பாடங்களுக்கு, மார்ச், 14ல் தேர்வு துவங்க உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வந்த பின், அண்ணா பல்கலையில் இன்ஜி., கவுன்சிலிங் நடக்கும். இதில், முக்கிய பாடங்களின் மதிப்பெண் தான் கணக்கில் எடுக்கப்பட்டு, மாணவர் சேர்க்கப்படுவர். ஆனால், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, இன்ஜி., படிப்பில் சேர்ந்து முதல் செமஸ்டரின் பல பாடங்களில் தேர்ச்சி பெறுவதில்லை என்ற புகார் உள்ளது.

அதனால், பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகள் எப்படி நடக்கின்றன; மாணவர்கள் புரிந்து கொண்டு தேர்வை எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட, தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. இதற்காக, 30 இன்ஜி., கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் அண்ணா பல்கலை தேர்வுத்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை

அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்காரணமாக அரசு பள்ளி, கல்லுாரிகளில் ஆண்டு விழா நடத்தவும், பட்டமளிப்பு விழா நடத்தவும் தடை விதிக்கபட்டுள்ளது. விழாவாக நடத்தாமல் மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர்களே பட்டங்கள் வழங்கலாம், என கூறப்பட்டுள்ளது

மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல் தளத்தில் தேர்வெழுத தடை

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை, மேல் தளம் மற்றும் திறந்த வெளியில் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் பங்கேற்போரில், கண் பார்வையற்ற, காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர், டிஸ்லெக்சியா குறைபாடு, மனநலம் குறைபாடு, உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. எழுதுபவரை நியமித்துக்கொள்வது, கூடுதல் தேர்வு நேரம் உள்ளிட்டவைகளை, தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் பரிந்துரையில் சலுகை வழங்கப்பட்டு வந்தது.நடப்பு ஆண்டில், சலுகை பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பட்டியல்களை தேர்வுத்துறையே தயாரித்து, அதில் வழங்க வேண்டிய சலுகைகள் குறித்தும், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளி மாணவர்களை, கட்டாயம் கீழ் தளத்தில் உள்ள வகுப்பறையில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். மேல் தளம், திறந்தவெளி உள்ளிட்டவைகளுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களை திறந்தவெளியில் அமர வைப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகை விபரங்களை முன்கூட்டியே, சம்பந்தப்பட்ட மாணவர், எழுதுபவர், கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு விளக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு முகப்பு தாளில் பிழை:திருத்தம் செய்ய வழிமுறை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில், தைக்கப்பட்டுள்ள முகப்பு சீட்டில், ஒரு சில மாணவர்களின் விவரங்களில் பிழை இருந்ததால், தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், அவற்றை திருத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள்:தமிழகத்தில ப்ளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான, பெயர் பட்டியல் தயாரிப்பு, ஹால் டிக்கெட் வழங்கல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், 'ஆன்லைன்' மூலமாகவே நடக்கிறது. அதே போல், மாணவர்கள் தேர்வெழுதும் விடைத்தாளின் முகப்பு சீட்டில், அவர்களது பெயர், விவரம் அச்சிடப்பட்டு, தைக்கப்படுகிறது.

இந்த முகப்பு சீட்டும், தேர்வுத் துறை இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அதில், ஒரு சில மாணவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட பிழைகளை திருத்தம் செய்வதில், சிக்கல் ஏற்பட்டது.இதற்கான விளக்க அறிக்கையை தேர்வுத் துறை, அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. அதில், முகப்பு தாளில், மீடியம் தவறாக இருத்தல், பெயர், பாலினம் தவறாக இருத்தல், பார்கோடு சேதம் அடைந்திருந்தல், பாடக்குறியீட்டு எண் மாற்றம், புகைப்படம் மாறியிருத்தல் உள்ளிட்ட பிழைகளை திருத்தும் வழிமுறையும், அதற்காக எடுக்க வேண்டிய நடைமுறைகளும் விளக்கமாக வழங்கப்பட்டுள்ளன.

ஹால் டிக்கெட்:பிழைகளுக்காக மாணவர்களை தேர்வெழுதுவதை தடுக்காமல், தேர்வு மையத்தின் பெயர், நுழைவுச்சீட்டு மற்றும் சீட்டிங் பிளான் அடிப்படையில், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட் இல்லையென்றால் மட்டுமே, தேர்வெழுத அனுமதி கிடையாது.

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரித்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரித்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியிருப்பதாவது:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மொத்த பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கு கடந்த ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களைக் கொண்ட முன்னுரிமை பட்டியலை தலைமை ஆசிரியர்கள் தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை தயாரித்து இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும். பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் அந்த பள்ளியில் இல்லாவிட்டால் அதற்கான அறிக்கை தர வேண்டும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் விடுபட்டால் அதற்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது பள்ளிக்கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும் என, கூறப்பட்டுள்ளது.-

அரசு பள்ளிகளில் கன்னியாகுமரி மாவட்டம்,முதலிடம்

தமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், செயல்முறை வழி கல்வி திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித்துறை நடைமுறை படுத்தியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வி துறையில், தனியாக திட்ட இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி பணியாற்றுகிறார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான, இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன.


அரசு உத்தரவு:மார்ச், 14 முதல் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் துவங்குகின்றன. சட்டசபை தேர்தல் வருவதால், தேர்வு பணிகளை விரைந்து முடிக்க, தேர்வுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளன. தமிழ் பாட விடைத்தாள்களை, தேர்வு மையம் வாரியாக தொகுத்து அவற்றை விடைத்தாள் திருத்தும் மையத்தில் பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் மே 16ம் தேதி ஓட்டுப்பதிவு; 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு



தமிழகத்தில் வரும் ஏப்ரல் 22 ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஏப்ரல் 29 ம்தேதி மனு தாக்கலுக்கு இறுதி நாள் , ஏப்ரல் 30 ல் வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் மே 2 மனு திரும்ப பெறும் நாள். ஓட்டுப் பதிவு மே 16 ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 19 ம் தேதி இவ்வாறு தேர்தல் கமிஷனர் ஜைதி கூறினார்.


முதுகலை ஆசிரியர்கள் நியமனம்; விரைவில் டி.ஆர்.பி., தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
2016-17ம் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறுவோர் உட்பட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் உருவாகும் நிலை உள்ளது. இதில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். எஞ்சிய 50 சதவீதம் தேர்வு மூலமே நியமிக்க முடியும். பதவி உயர்விற்காக 2002-03 முதல் 2008 வரையிலும் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடங்களை பொறுத்து பதவி உயர்விற்கு பணி மூப்பு பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேரடி நியமன விதிமுறைப்படி 1,063 பேருக்கான டி.ஆர்.பி.எழுத்துத் தேர்விற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கென சிறப்பு அரசாணை வெளியிட்ட நிலையில்தேர்வுக்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக டி.ஆர்.பி.தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஜூன் அல்லது ஜூலையில் தேர்வு நடக்கும் எனகல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விடைத்தாள் திருத்தும் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விடைத்தாள் திருத்தும் உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.பி. தங்கவேல் தலைமை வகித்தார். மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஆர். செல்வம், மாநிலத் துணைத் தலைவர் எஸ். சேகர், மண்டலச் செயலர் சி. செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஒரு விடைத்தாளுக்கு சுமார் 25 நிமிஷங்கள் செலவிட்டு கவனமாகத் திருத்த வேண்டியுள்ளது. நாளொன்றுக்கு அதிகபட்சம் 20 விடைத் தாள்களைத்தான் திருத்த முடியும். திருத்தும் மையங்களில் உள்ள குறைகள் ஏராளம். ஆனால், தற்போது விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.7.50 மட்டுமே வழங்கப்படுகிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கு ரூ. 15 வழங்கப்படுவதுடன் போக்குவரத்துப் படியாக முதல் வகுப்புக் கட்டணமும் வழங்கப்படுகிறது.

கர்நாடகத்தில் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.15 மற்றும் தினப்படியாக உள்ளூர் ஆசிரியர்களுக்கு ரூ.125, வெளியூர் ஆசிரியர்களுக்கு ரூ.800 வரை வழங்கப்படுகிறது. எனவே, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான உழைப்பூதியத்தை ரூ.20 ஆகவும், பயணப் படிகளையும் உயர்த்தி வழங்க வேண்டும்

விடைத்தாள் திருத்தும் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விடைத்தாள் திருத்தும் உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.பி. தங்கவேல் தலைமை வகித்தார். மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஆர். செல்வம், மாநிலத் துணைத் தலைவர் எஸ். சேகர், மண்டலச் செயலர் சி. செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஒரு விடைத்தாளுக்கு சுமார் 25 நிமிஷங்கள் செலவிட்டு கவனமாகத் திருத்த வேண்டியுள்ளது. நாளொன்றுக்கு அதிகபட்சம் 20 விடைத் தாள்களைத்தான் திருத்த முடியும். திருத்தும் மையங்களில் உள்ள குறைகள் ஏராளம். ஆனால், தற்போது விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.7.50 மட்டுமே வழங்கப்படுகிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கு ரூ. 15 வழங்கப்படுவதுடன் போக்குவரத்துப் படியாக முதல் வகுப்புக் கட்டணமும் வழங்கப்படுகிறது.

கர்நாடகத்தில் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.15 மற்றும் தினப்படியாக உள்ளூர் ஆசிரியர்களுக்கு ரூ.125, வெளியூர் ஆசிரியர்களுக்கு ரூ.800 வரை வழங்கப்படுகிறது. எனவே, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான உழைப்பூதியத்தை ரூ.20 ஆகவும், பயணப் படிகளையும் உயர்த்தி வழங்க வேண்டும்

பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 9.25 லட்சம் மாணவர் பங்கேற்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 9.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கி, ஏப்., 1ல் முடிகிறது. 5,600 பள்ளிகளை சேர்ந்த, 9.25 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்; இதற்காக, 2,425 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 தேர்வில், வினாத்தாள் எளிதாக இருக்குமா; 'சென்டம்' வாங்குவது எப்படி? ' 104'ஐ அழைக்கும் மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வில், வினாத்தாள் எளிதாக இருக்குமா; 'சென்டம்' வாங்குவது எப்படி? என, மாணவர்கள், '104' உதவி எண்ணை அழைத்துள்ளனர். அவர்களிடம், மனநல ஆலோசகர்கள் போனில் பேசி, அச்சத்தை போக்குகின்றனர்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. மாணவர்களை மாநில, 'ரேங்க்,' மாவட்ட, 'ரேங்க்' எடுக்கவும், உயர்கல்வியில், இன்ஜி., மற்றும் மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்கில் சேரும் வகையில், அதிக மதிப்பெண் பெறவும், பெற்றோர் அழுத்தம் தருவர்.

இதனால், மாணவர்கள் அதிகளவில் அச்சமடைந்து, தேர்வு முடியும் வரை பதற்றமாகவே
இருப்பர். சில நேரங்களில், சரியாக தேர்வு எழுத முடியாவிட்டால், வீட்டை விட்டு வெளியேறுவது; தற்கொலை முயற்சி என, விபரீத முடிவுகளையும் எடுப்பதுண்டு.

இந்த நிலையை மாற்றி, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க, அரசு சார்பில், '104' உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணுக்கு, நேற்று வரை, 3,000 பேர் போன் செய்துள்ளனர்.
அவர்களில், பெரும்பாலானோர் 'அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?' என, 'டிப்ஸ்' கேட்டுள்ளனர்.

சில மாணவர்கள், 'தேர்வு நேரத்தில் பயமின்றி, பதற்றமின்றி, விடைகளை உரிய நேரத்தில் எப்படி எழுதுவது?' என கேட்டுள்ளனர். சிலர், தங்களுக்கு விடைகள் தெரிந்தும், அதை தேர்வு மையத்தில் எழுத முடியவில்லை என, கூறியுள்ளனர். பெரும்பாலானோர், 'இந்த ஆண்டு வினாத்தாள் எளிதாக வருமா; அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?' என, கேட்டுள்ளனர். ஆனால், எந்தவிதமான கேள்விகள் வந்தாலும், மனநல ஆலோசகர்கள் மூலம் நம்பிக்கையான வார்த்தைகளை கூறி, மாணவர்களுக்கு, '104' குழுவினர் ஆறுதல் தருகின்றனர்.

விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி திடீர் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்க, ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கடலுார் மாவட்ட விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி, திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதனால், பொதுத் தேர்வு துவங்கும் முன்னரே, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் எந்த பள்ளி மாநில, 'ரேங்க்' எடுப்பது; எந்த பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெறுவது என, கடும் போட்டி உண்டு. இதற்காக, தேர்வு பணிக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களில், தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க, ஆசிரியர் சங்கங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் பல வகை சிபாரிசுகள் தேர்வுத் துறைக்கு வருவது உண்டு. இந்த ஆண்டு தேர்வு பணிகளில் குளறுபடி, பொதுத் தேர்வு துவங்கும் முன், துவங்கி விட்டது.