காஞ்சிபுரம்:'மாவட்டத்தில், அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கான வழி முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ஆவணங்களை சரி வர சமர்ப்பித்தால்,
மூன்று நாட்களில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாநில அரசு பணிகளில் ஓய்வு பெற்றவர்கள், முதல் ஓய்வூதியத்தை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை, மாவட்ட தலைமை கருவூத்திற்கு வந்து, விவரம் கேட்டு, அதன் பின் கொண்டு வந்து கொடுப்பர். அதில் குறைபாடு இருந்தால், மீண்டும் அலைய வேண்டி இருந்தது.
தற்போது, அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வசதிக்காக என்னென்ன ஆவணங்கள்
கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்ற விவரம், kanchi.nic.in என்ற, மாவட்ட இணையதளத்தில்
பதிவேற்றப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, அதன்படி ஆவணங்களை கொடுக்கலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:'பான்' கார்டு, தடையில்லா சான்று, தனிநபர் வங்கி கணக்கு எண், 'ஆதார்' எண், இரண்டு புகைப்படங்கள் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
lமாவட்டத்தில் தற்போது, 26 ஆயிரத்து, 71 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்கள், 940. இந்த ஆண்டு, 214, இதில், மே மாதம் ஓய்வு பெற்றவர்கள், 36, ஜூன் மாதம் ஓய்வு பெற்றவர்கள், 2 பேர்.
கருவூலம் மேற்கொள்ளும் பணி:ஓய்வூதிய ஒப்புதல் ஆணை, கருவூலத்தில் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல் தெரிவிக்கப்படும்
ஓய்வூதியர் தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்த பின், ஏழு
நாட்களுக்குள் முதல் ஓய்வூதிய தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்
சார் நிலை கருவூலத்திற்கு ஓய்வூதிய ஒப்புதல் ஆணைகள், மூன்று நாட்களுக்குள் அனுப்பி, தகவல் தெரிவிக்கப்படும்
ஓய்வூதிய ஒப்புதல் ஆணை வந்து, 15 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்ப பட்டியல், மாவட்ட இணையதளத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும்
ஒரு மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள பணிக்கொடை ஆணைகளின் விவரம், முதல் வாரத்தில், மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்
மாநில கணக்காய்வாளருக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, ஓய்வூதிய ஒப்புதல் ஆணை பெறப்படாதவர்களின் தற்போதைய நிலையை மாநில கணக்காய்வாளரின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் விவரம் எங்களுக்கு உடனடியாக வராது.
அவர்கள் அதற்கான ஆவணங்கள் முழுமையாக கொடுப்பதை பொறுத்து, எங்களுக்கு
மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிப்பர். நாங்கள், அவர்கள்
என்னென்ன ஆவணங்கள் கொண்டு வரவேண்டும் என, கூறுவோம். அவை சரியானதாக இருந்தால், மூன்று நாட்களில் புதிய ஓய்வூதிய தாரர்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் பணம்
செலுத்தப்படும். இனி, ஓய்வூதியதாரர்கள் இங்கு வந்து அலைய வேண்டாம். மாவட்ட
இணையதளத்தில் அதன் முழுவிவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து
கொள்ளலாம். இந்த வசதி வேறு எந்த மாவட்டத்திலும் கிடையாது.
க. காத்தவராயன், இணை இயக்குனர், மாவட்ட கருவூலம், காஞ்சிபுரம்