தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை நிதி ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 40 சதவீத குறைபாடுகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பின்றி சலுகை வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம். அரசு பணியாளர்கள் குடும்பத்துக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 4 லட்சமாக தொடரும். இந்த திட்டத்தால் 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார்.
G.O CLICK HERE
G.O CLICK HERE