அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் முறை!

தமிழகத்தில் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் மாணவர்களுக்கான விரல் வருகை பதிவேடு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டம் நடைமுறையில் இருப்பதால், கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கான முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 8 அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, இத்திட்டம் விரைவில் மாவட்ட முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும், இதனால் மாணவர்களை ஆசிரியர்கள் எளிதாக கண்காணிக்க முடியும் என்று தெரிவித்தார்.