ஆசிரியர்களை கண்காணிக்க புது ’சாப்ட்வேர்’

தமிழக அரசு பள்ளிகளின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விவரங்களை, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட வாரியாக கணக்கு எடுத்துள்ளது.
இந்த விவரங்கள்பள்ளிக்கல்வி துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுசாப்ட்வேர் மூலம்,கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த,சாப்ட்வேர் மூலம்அனைத்து கல்வி மாவட்டங்களின் தேர்ச்சி விவரங்களும் புள்ளி விவரத்துடன் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி வாரியாகஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் பின்எந்த பள்ளியில்எந்த பாடத்தில் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்துள்ளதுஒரு மாணவனின் தேர்ச்சி குறைய எந்த பாடம் காரணம்அதற்கான ஆசிரியர் யார் என்ற விவரங்கள்,கணினியில் சேகரிக்கப்படுகின்றன.
இந்த பட்டியலின் படிசம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டுஅவரின் பணிகள்வகுப்பு நடத்தும் முறைகற்பித்தல் ஈடுபாடு ஆகியவையும் ஆய்வு செய்யப்படும். அந்த ஆசிரியர் சரியாக பணி செய்யாவிட்டால்அவருக்குநோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்கவும்;ஆர்வமான ஆசிரியராக இருந்தால் அவருக்குமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம்விரிவுரையாளர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கவும்பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள், 50 சதவீதத்தை தாண்டியுள்ளன. மேலும்தற்போது முதலே ஆசிரியர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.