தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

 தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், கோடை விடுமுறை முடிந்து வழக்கம் போல ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 1ம் தேதி, மாணவ, மாணவிகளுக்கான இலவசப் பொருட்கள் மற்றும் பேருந்து பயணச் சீட்டு ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.