பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள இணையதள முகவரிகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. 19ம் தேதி முதல் மாணவர்களே தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 
இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.