எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நாளை 26-ந்தேதி முதல் விண்ணப்பம் ஜூன் 20-ந்தேதி முதல்கட்ட கலந்தாய்வு

சென்னை, 

மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் விமலா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறி விக்கை இன்று வெளியிடப் பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.  நாளை (26-ந்தேதி) முதல் அனைத்து அரசு மருத்துக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரி யிலும்  விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. ரூ.500-க்கான காசோலையை செலுத்தி விண்ணப்பங் களை பெற்றுக் கொள்ள லாம்.

ஜூன் 6-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் ஜூன் 7-ந்தேதி மாலை 5 மணி வரை பெறப்படும்.

இதைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் ஜூன் 17-ந்தேதி வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறும். இதையடுத்து 2-வது கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ந் தேதி தொடங்கும். ஆகஸ்டு 1-ந்தேதி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தொடங்கும்.
மாணவர் சேர்க்கைக்கான விவரங்களை www.tnhealth.org  என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 2,650 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம்.  397 இடங்கள் போக மீதமுள்ள 2,253 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 760 இடங்களில் அரசு ஒதுக்கீடு இடம் 470 ஆகும். மற்றும்  சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் உள்ள  65 அரசு ஒதுக்கீட்டு இடமும் இதன்மூலம் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.